தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

முத்தரப்பு ஒருநாள் தொடர்: இங்கிலாந்து வெளியேறியது; இறுதிப்போட்டியில் பாகிஸ்தான், இலங்கை!

முத்தரப்பு ஒருநாள் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரானப் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

படம் | AP

Published On :27 அக்டோபர் 2026, 7:29 pm IST

முத்தரப்பு ஒருநாள் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரானப் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடரில் லாகூரில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் பாகிஸ்தானை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி பெற்றது.

முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி இலங்கையின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 110 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பாபர் அசாம் 29 ரன்கள் எடுத்தார். ஹாசன் நவாஸ் 17 ரன்கள், ஷாகின் அஃப்ரிடி 15 ரன்கள், அராஃபாத் மின்ஹாஸ் 10 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இலங்கை தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய தில்ஷன் மதுஷங்கா 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். சஹான் இரண்டு விக்கெட்டுகளையும், அஷிதா ஃபெர்னாண்டோ, எஷான் மலிங்கா மற்றும் துனித் வெல்லாலகே தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

இறுதிப்போட்டியில் இலங்கை; வெளியேறியது இங்கிலாந்து!

111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி 18.1 ஓவர்களில் இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கமிந்து மெண்டிஸ் 60 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, பவன் ரத்நாயகே 23* ரன்கள், அவிஷ்கா ஃபெர்னாண்டோ 16 ரன்கள் எடுத்தனர்.

இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்த இங்கிலாந்து அணி தொடரிலிருந்து வெளியேறியது.

பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இரு அணிகளுக்கும் இடையிலான இறுதிப்போட்டி வருகிற அக்டோபர் 31 ஆம் தேதி லாகூரில் நடைபெறவுள்ளது.

Summary

In the match against Pakistan during the triangular ODI series, the Sri Lankan team secured a resounding 8-wicket victory.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.