மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டி20 போட்டியிலிருந்து இஷான் கிஷன் விலகல்!

நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டி20 போட்டியிலிருந்து இஷான் கிஷன் விலகியது பற்றி...

ishan kishan

இஷான் கிஷன் - ANI

Published On :26 அக்டோபர் 2026, 10:50 am IST

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியிலும் இந்திய வீரர் இஷான் கிஷன் விளையாட மாட்டார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது. இதுவரை இரு டி20 போட்டிகள் முடிவடைந்திருக்கும் நிலையில், இந்திய அணி 2-0 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலையில் உள்ளது.

கடந்த அக். 22 ஆம் தேதி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷனுக்கு இடுப்புப் பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது.

இந்த தசைப்பிடிப்பிலிருந்து குணமடையாத நிலையில், இரண்டாவது போட்டியில் இஷான் கிஷன் விளையாடவில்லை.

இந்த நிலையில், வெலிங்டனில் நாளை (அக். 27) நடைபெறவுள்ள மூன்றாவது டி20 போட்டியிலும் இஷான் கிஷன் விளையாட மாட்டார் என்று பிசிசிஐ இன்று தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

”நியூசிலாந்துக்கு எதிரான தொடரின் முதல் டி20 போட்டியில், வலது தொடை இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட லேசான தசைப்பிடிப்பிலிருந்து இஷான் கிஷன் குணமடைந்து வருகிறார்.

அவர் இன்னும் முழுமையான உடல் தகுதியை எட்டவில்லை என்பதால், அக்டோபர் 27, 2026 அன்று வெலிங்டனில் நடைபெறவுள்ள மூன்றாவது டி20 போட்டியில் அவர் பங்கேற்க மாட்டார். பிசிசிஐ மருத்துவக் குழுவினர் அவரது உடல்நிலை முன்னேற்றத்தைக் கண்காணித்து வருகின்றனர்.

மூன்றாவது டி20 போட்டிக்காகவும் குமார் குஷாக்ரா அணியுடன் தொடர்ந்து நீடிப்பார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Summary

Ishan Kishan ruled out of the 3rd T20 match against New Zealand!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.