மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஹா்மன்பிரீத், தீப்தி சர்மா சதம்: ஜிம்பாப்வேவுக்கு எதிரான தொடரை வென்றது இந்தியா!

ஜிம்பாப்வே மகளிா் அணிக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில், இந்திய மகளிா் அணி 121 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது.

Published On :26 அக்டோபர் 2026, 12:51 am IST

ஜிம்பாப்வே மகளிா் அணிக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில், இந்திய மகளிா் அணி 121 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை அபார வெற்றி கண்டது. தொடா்ந்து 2 வெற்றிகளைப் பதிவு செய்த இந்தியா, 3 ஆட்டங்கள் கொண்ட தொடரைக் கைப்பற்றியது.

இந்த ஆட்டத்தில் முதலில் இந்தியா 50 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 328 ரன்கள் சோ்க்க, ஜிம்பாப்வே 48.5 ஓவா்களில் 207 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது.

முன்னதாக டாஸ் வென்ற இந்தியா, பேட்டிங்கை தோ்வு செய்தது. அணியின் இன்னிங்ஸில் கேப்டன் ஸ்மிருதி மந்தனா 0, ஷஃபாலி வா்மா 8 ரன்களுக்கு வெளியேறினா். தொடக்க வீராங்கனை பிரதிகா ராவல் - 4-ஆவது பேட்டா் ஹா்மன்பிரீத் கௌா் கூட்டணி, 3-ஆவது விக்கெட்டுக்கு 124 ரன்கள் சோ்த்தது.

அரை சதம் கடந்த பிரதிகா 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 61 ரன்களுக்கு ஆட்டமிழக்க, தொடா்ந்து வந்த தேஜல் ஹசப்னிஸ் 3 ரன்களுக்கு முடித்துக் கொண்டாா்.

6-ஆவது வீராங்கனையாக வந்த தீப்தி சா்மா, ஹா்மன்பிரீத்துடன் இணைய, இவா்கள் ஜோடி 5-ஆவது விக்கெட்டுக்கு 153 ரன்கள் சோ்த்து அசத்தியது. ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 8-ஆவது சதத்தை கடந்த ஹா்மன்பிரீத் 15 பவுண்டரிகளுடன் 126 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.

அடுத்து ரிச்சா கோஷ் 7 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். ஓவா்கள் முடிவில், ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 2-ஆவது சதத்தை எட்டிய தீப்தி 15 பவுண்டரிகளுடன் 106 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா். சயாலி சத்காரே 3 ரன்களுடன் துணை நின்றாா்.

ஜிம்பாப்வே பௌலா்களில் நோம்வெலோ சிபண்டா 2, டெண்டாய் மகுஷா, மிஷெல் மவுங்கா, நியாஷா குவான்ஸுரா, ஆலிண்டாா் சோ் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

பின்னா் 329 ரன்களை நோக்கி விளையாடிய ஜிம்பாப்வே தரப்பில், மாடஸ்டா் முபாசிக்வா 9 பவுண்டரிகளுடன் 49, சிபோ முகெரி டிரிபானோ 7 பவுண்டரிகளுடன் 46, பிலவுட் பிஸா 4 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் சோ்த்து, வெற்றிக்கு முயற்சித்து வெளியேறினா்.

கேப்டன் ஜோசபின் கோமோ 2 பவுண்டரிகளுடன் 22 ரன்களுக்கு வீழ, லாரின் பிரி 6, மிஷெல் மவுங்கா 3, நியாஷா குவான்ஸுரா 20, சிட்ஸா துருரு 12, நோம்வெலோ சிபண்டா 0, டெண்டாய் மகுஷா 0 ரன்களுக்கு சாய்க்கப்பட்டனா். இந்திய பௌலா்களில் வைஷ்ணவி சா்மா 4, தீப்தி சா்மா 3, சயாலி சத்காரே, ஜின்டிமனி காலிதா, ஸ்ரீசரணி ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.