மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கடைசி டி20: நூர் அகமது அபார பந்துவீச்சு; 79 ரன்களுக்கு ஆட்டமிழந்த ஜிம்பாப்வே!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி 79 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

Noor Ahmad

நூர் அகமது - படம் | ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்

Published On :1 நவம்பர் 2026, 10:12 pm IST

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி 79 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ஆப்கானிஸ்தான் - ஜிம்பாப்வே இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி ஷார்ஜாவில் இன்று (நவம்பர் 1) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ஜிம்பாப்வே முதலில் விளையாடியது.

நூர் அகமது அபார பந்துவீச்சு!

முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி ஆப்கானிஸ்தானின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 14.3 ஓவர்களில் 79 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ஜிம்பாப்வே அணியில் அதிகபட்சமாக ரியான் பர்ல் 29 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். அதில் 5 பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, வெஸ்லி மத்வீர் 10 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

ஆப்கானிஸ்தான் தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய நூர் அகமது 3.3 ஓவர்களில் 13 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அப்துல்லா இரண்டு விக்கெட்டுகளையும், ஃபஸல்ஹக் ஃபரூக்கி, அஸ்மதுல்லா ஓமர்ஸாய் மற்றும் அப்துல்லா அகமதுஸாய் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

80 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி ஆப்கானிஸ்தான் அணி விளையாடி வருகிறது.

இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெறும் பட்சத்தில், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை அந்த அணி 3-0 என முழுமையாக கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

In the third T20 match against Afghanistan, Zimbabwe batted first and were bowled out for 79 runs.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.