மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

முதல் ஒருநாள்: ஸ்ரீ சரணி அசத்தல்; 197 ரன்களுக்கு ஆட்டமிழந்த ஜிம்பாப்வே!

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி 197 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

படம் | பிசிசிஐ

Published On :23 அக்டோபர் 2026, 5:37 pm IST

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி 197 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்தியா - ஜிம்பாப்வே இடையேயான முதல் ஒருநாள் போட்டி வதோதராவில் இன்று (அக்டோபர் 23) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.

இந்தியாவுக்கு 198 ரன்கள் இலக்கு!

டாஸ் வென்று முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி 49.5 ஓவர்களில் 197 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

அந்த அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிலௌட் பிஸா அரைசதம் கடந்து அசத்தினார். சிறப்பாக விளையாடிய அவர் 92 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் அடங்கும். மிச்செல் மவுங்கா 29 ரன்கள், மாடெஸ்டர் முபாசிக்வா 25 ரன்கள், சிபோ முகேரி 21 ரன்கள் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை.

இந்தியா தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஸ்ரீ சரணி 4 விக்கெட்டுகளையும், கிராந்தி கௌட் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். தீப்தி சர்மா இரண்டு விக்கெட்டுகளையும், ஷஃபாலி வர்மா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்குகிறது.

Summary

Zimbabwe, who batted first in the first ODI against India, were bowled out for 197 runs.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.