மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கடைசி டி20: இந்தியாவை வீழ்த்தி அபார வெற்றியுடன் தொடரை நிறைவு செய்த நியூசிலாந்து!

இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

New Zealand players

நியூசிலாந்து வீரர்கள் - படம் | AP

Published On :1 நவம்பர் 2026, 4:38 pm IST

இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியா - நியூசிலாந்து இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி ஹாமில்டனில் இன்று (நவம்பர் 1) நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக இஷான் கிஷன் 61 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 50 ரன்கள், நமன் திர் 33 ரன்கள் மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி 22 ரன்கள் எடுத்தனர்.

நியூசிலாந்து தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஆடம் மில்னே 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். நாதன் ஸ்மித் மற்றும் பிளேர் டிக்னர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

டிம் செய்ஃபர்ட், கிளன் பிலிப்ஸ் அதிரடி!

192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி 18 ஓவர்கள் முடிவில் இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

நியூசிலாந்து அணியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டிம் செய்ஃபர்ட் மற்றும் கிளன் பிலிப்ஸ் அரைசதம் விளாசி அசத்தினர். அதிரடியாக விளையாடிய டிம் செய்ஃபர்ட் 50 பந்துகளில் 93 ரன்கள் எடுத்து 7 ரன்களில் சதம் விளாசும் வாய்ப்பை தவறவிட்டார். அதில் 11 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். கிளன் பிலிப்ஸ் 38 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். டேரில் மிட்செல் 29 ரன்கள் எடுத்தார்.

இந்தியா தரப்பில் அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை நியூசிலாந்து அணி 2-3 என்ற கணக்கில் நிறைவு செய்தது.

Summary

New Zealand secured a resounding 7-wicket victory against India in the fifth T20 match.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.