தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

4-வது டி20: இந்தியாவை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்த நியூசிலாந்து!

இந்தியாவுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

New Zealand team players rejoicing after taking a wicket

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் நியூசிலாந்து அணி வீரர்கள் - படம் | AP

Published On :30 அக்டோபர் 2026, 4:51 pm IST

இந்தியாவுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியா - நியூசிலாந்து இடையேயான நான்காவது டி20 போட்டி ஆக்லாந்தில் இன்று (அக்டோபர் 30) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, நியூசிலாந்து அணி முதலில் பேட் செய்தது.

சதம் விளாசிய கிளன் பிலிப்ஸ்!

முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 259 ரன்கள் எடுத்தது.

நியூசிலாந்து அணியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கிளன் பிலிப்ஸ் சதம் விளாசி அசத்தினார். அவர் 49 பந்துகளில் 107 ரன்கள் எடுத்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, அதிரடியாக விளையாடிய மைக்கேல் பிரேஸ்வெல் அரைசதம் விளாசி அசத்தினார். அவர் 25 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும். ஃபின் ஆலன் 31 ரன்கள், டேரில் மிட்செல் 24 ரன்கள் எடுத்தனர்.

இந்தியா தரப்பில் மயங்க் யாதவ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அர்ஷ்தீப் சிங், பிரின்ஸ் யாதவ், அக்‌ஷர் படேல் மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

நியூசிலாந்து அணிக்கு முதல் வெற்றி!

260 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், 87 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது.

இந்திய அணியில் அதிகபட்சமாக திலக் வர்மா 35 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, நமன் திர் 28 ரன்கள், அபிஷேக் சர்மா 27 ரன்கள், கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 22 ரன்கள் மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி 21 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை. இந்திய அணியில் ஒருவர் கூட அரைசதம் கடக்கவில்லை.

நியூசிலாந்து தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜேக்கப் டஃபி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். மேத்யூ ஃபிஷர் மற்றும் மிட்செல் சாண்ட்னர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், ஆடம் மில்னே ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நியூசிலாந்து அணி முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

New Zealand secured a resounding 87-run victory against India in the fourth T20 match.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.