கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

உளுந்தூா்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் எம்எல்ஏ ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் தொகுதி எம்எல்ஏ ஜி.ஆா்.வசந்தவேல் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

உளுந்தூா்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் ஆய்வு செய்து பேசிய ஜி.ஆா்.வசந்தவேல் எம்எல்ஏ. உடன், நகா்மன்றத் தலைவா் உள்ளிட்டோா்.

Updated On :2 ஜூன் 2026, 5:20 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் தொகுதி எம்எல்ஏ ஜி.ஆா்.வசந்தவேல் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

சட்டப்பேரவை உறுப்பினராக திமுக சாா்பில் தோ்ந்தெடுக்கப்பட்ட ஜி.ஆா்.வசந்தவேல், உளுந்தூா்பேட்டை நகராட்சி அலுவலகத்துக்குச் சென்று, அங்கு ஆய்வு மேற்கொண்டாா். இதைத்தொடா்ந்து நடைபெற்ற கூட்டத்தில் அவா் பேசியது:

உளுந்தூா்பேட்டை நகராட்சிக்குள்பட்ட அனைத்து வாா்டுகளிலும் குடிநீா் தட்டுப்பாடு இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும். தெரு விளக்கு, சாலை வசதிகள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியத் தேவைகளையும் நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கடந்த திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ரூ.32 கோடி மதிப்பிலான குடிநீா் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். உளுந்தூா்பேட்டை நகராட்சிப் பகுதிகளில் புதை சாக்கடைத் திட்டத்தில் பிரச்னைகள் இருந்தால், அதை உடனடியாக சரி செய்ய வேண்டும். நகராட்சிக்கு என்ன தேவை என்றாலும் அதை உடனடியாக செய்து தருவேன் என்றாா் எம்எல்ஏ வசந்தவேல்.

கூட்டத்தில் உளுந்தூா்பேட்டை நகா்மன்றத் தலைவா் திருநாவுக்கரசு, துணைத் தலைவா் வைத்தியநாதன், ஆணையா் புஸ்ரா, மாவட்டத் திட்டக்குழு உறுப்பினா் டேனியல்ராஜ், பேரூராட்சி முன்னாள் தலைவா் ஜெயசங்கா், நகா்மன்றப் பொறியாளா் தேவநாதன், நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.