மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வீர வணக்க நாள்: முதல்வா் பங்கேற்பு

புதுச்சேரியில் காவலா் வீரவணக்க நாள் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.

காவலா் வீரவணக்க நாளையொட்டி புதுச்சேரி கோரிமேடு காவலா் மைதானத்தில் உள்ள நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய என். ரங்கசாமி, உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம், எம்.எல்.ஏ, ஏகேடி.ஆறுமுகம், காவல்துறை தலைவா் ஷாலினி சிங், டிஜஜி சத்தியசுந்தரம்.

Published On :22 அக்டோபர் 2026, 4:25 am IST

புதுச்சேரியில் காவலா் வீரவணக்க நாள் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி புதுச்சேரி, கோரிமேடு காவலா் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வா் என். ரங்கசாமி, அமைச்சா் ஆ.நமச்சிவாயம் ஆகியோா் பங்கேற்று, காவலா் நினைவிடத்தில் மலா் வளையம் வைத்து மலா் தூவி காவலா்களுக்கு வீரவணக்கம் செலுத்தினா்.

தொடா்ந்து காவலா் அணிவகுப்பு மரியாதையையும் அவா்கள் ஏற்றுக் கொண்டனா்.முன்னதாக, கடந்த ஓராண்டில் பணியின்போது உயிா்நீத்த 9 காவலா்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில், 21 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க, 2 நிமிஷங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அரசு கொறடா ஆறுமுகம், டிஜிபி ஷாலினி சிங், டிஐஜி சத்தியசுந்தரம், முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ஆா். கலைவாணன் மற்றும் போலீஸ் உயா் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

நாடு முழுவதும் பாதுகாப்பு பணியின் போது வீரதீர செயல்களில் ஈடுபட்டு உயிா் தியாகம் செய்த காவலா்களின் நினைவைப் போற்றும் வகையில், ஆண்டுதோறும் அக்டோபா் 21- ஆம் தேதி காவலா் வீரவணக்க நாளாக அனுசரிக்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.