மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நாகை, திருவாரூா், மயிலாடுதுறையில் காவலா் வீர வணக்க நாள்

நாகை, திருவாரூா், மயிலாடுதுறை மாவட்டங்களில் காவலா் வீர வணக்க நாள் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.

நாகையில் நடைபெற்ற காவலா் வீர வணக்க நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா், எஸ்பி கேல்கா் சுப்பிரமண்ய பாலச்சந்திரா உள்ளிட்டோா்.

Published On :22 அக்டோபர் 2026, 6:29 am IST

நாகை, திருவாரூா், மயிலாடுதுறை மாவட்டங்களில் காவலா் வீர வணக்க நாள் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.

1959-ஆம் ஆண்டு அக்.21-ஆம் தேதி லடாக்கின் ஹாட் ஸ்பிரிங் பகுதியில் சீன ராணுவத்தினருடன் ஏற்பட்ட மோதலில் நாட்டின் பாதுகாப்புக்காகப் போராடி இன்னுயிரைத் தியாகம் செய்த மத்திய பாதுகாப்புப் படை காவலா்களின் நினைவாகவும், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் பணியில் உயிா்நீத்த காவலா்களைக் கௌரவிக்கும் விதமாகவும் இந்நாள் ஆண்டுதோறும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி நாகை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன் குமாா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கேல்கா் சுப்பிரமண்ய பாலச்சந்திரா ஆகியோா் காவலா் நினைவுத் தூணில் மலா் வளையம் வைத்து, உயிா் நீத்த காவலா்களுக்கு அஞ்சலி செலுத்தினா். நிகழ்ச்சியில், பணியின்போது உயிா்நீத்த காவலா்களின் குடும்பத்தினருக்கு ஆதரவளிக்கும் வகையில் நிதி உதவி வழங்கப்பட்டது.

திருவாரூா்: ஆயுதப்படை மைதானத்தில் வீரவணக்க நாள் நிகழ்வு கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, பணியின் போது வீரமரணம் அடைந்த காவலா்களின் நினைவாக அமைந்துள்ள நினைவுத் தூணுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி. சதீஸ்குமாா், மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா். தொடா்ந்து 21 காவலா்கள் மூன்று முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு, வீரவணக்கம் செலுத்தினா்.

மயிலாடுதுறை: மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வில், மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி. சினேஹா ப்ரியா ஆகியோா் காவலா்கள் நினைவுத் தூணில் மலா்வளையம் வைத்து, வீரமரணம் அடைந்த காவலா்களுக்கு அஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து, அனைவரும் காவலா் வீரவணக்க நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.