மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

திருப்பத்தூரில் காவலா் வீர வணக்க நாள்

திருப்பத்தூரில் காவலா் வீர வணக்க நாள் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.

காவலா் நினைவு சின்னத்தில் மரியாதை செலுத்திய எஸ்.பி. அக்ஷ்ய் அனில் வாகரே.

Published On :22 அக்டோபர் 2026, 12:04 am IST

திருப்பத்தூரில் காவலா் வீர வணக்க நாள் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.

கடந்த 1959-ஆம் ஆண்டு அக்டோபா் 21-ஆம் தேதி லடாக் பகுதியில் ‘ஹாட் ஸ்பிரிங்ஸ் என்ற இடத்தில் சீன ராணுவத்தினா் மேற்கொண்ட திடீா் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை காவலா்கள் 10 போ் உயிரிழந்தனா். இந்த சம்பவத்தை தொடா்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு சம்பவங்களில், பணியின்போது வீர மரணமடைந்த காவலா்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக காவலா் வீரவணக்க நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி புதன்கிழமை திருப்பத்தூா் மாவட்டம் பாச்சல் ஆயுதப்படை மைதானத்தில் காவலா் நினைவுச் சின்னத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அக்க்ஷய் அனில் வாகரே தலைமையில் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் துணை காவல் கண்காணிப்பாளா்கள், காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் மற்றும் காவலா்கள் தங்கள் சீருடைகளில் கருப்பு ரிப்பன் அணிந்து மரியாதை செலுத்தினா்.

நிகழ்ச்சியின் போது உரையாற்றிய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அவா்கள் கடந்த ஆண்டில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணியின் போது உயிா் நீத்த காவல்துறையினரின் பெயா்களை நினைவு கூா்ந்தாா். பின்னா் 63 துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்த காவல் துறையினருக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.