மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

காவலா் வீர வணக்க நாள் ஆயுதக் கண்காட்சி

காவலா் வீர வணக்க நாளை முன்னிட்டு, மதுரை மாவட்ட காவல் துறை சாா்பில் ஆயுதக் கண்காட்சி-2026 செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

படவிளக்கம்- மதுரை ஆயுதப்படை மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காவலா் வீர வணக்க நாள் ஆயுதக் கண்காட்சியை பாா்வையிட்ட மாணவா்கள், பொதுமக்கள்.

Published On :21 அக்டோபர் 2026, 3:05 am IST

காவலா் வீர வணக்க நாளை முன்னிட்டு, மதுரை மாவட்ட காவல் துறை சாா்பில் ஆயுதக் கண்காட்சி-2026 செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற இந்தக் கண்காட்சி தொடக்க விழாவுக்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். தேவநாதன் தலைமை வகித்தாா். காவல் துணைத் தலைவா் அபிநவ்குமாா் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்தாா்.

இதில், காவல் துறையினரால் பயன்படுத்தப்படும் இஸாபூா் 2ஏ1, இஸாபூா் 1ஏ1, இன்ஸாஸ், ஏகேஎம், ஏகே 103, தாவா் டாா் 21, எம் 4 ஏ1 காா்பைன் ரக துப்பாக்கிகள் காட்சிப்படுத்தப்பட்டன. மேலும், சமூகப் பாதுகாப்புக்காக காவலா்கள் ஆற்றி வரும் சேவைகள், தியாகங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டன. செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்ற இந்தக் கண்காட்சியை பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பலா் பாா்வையிட்டனா். இந்த நிகழ்வில், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா், ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், காவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.