மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஈரோட்டில் காவலா் வீர வணக்க நாள் கடைப்பிடிப்பு

ஈரோட்டில் காவலா் வீர வணக்க நாள் தினத்தையொட்டி பணியின்போது உயிரிழந்த போலீஸாருக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் மலா் வளையம் வைத்து புதன்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

ஈரோடு மாவட்ட ஆயுதப் படை வளாகத்தில் உள்ள காவலா் நினைவுத் தூணில் மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறாா் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி.

Published On :22 அக்டோபர் 2026, 3:55 am IST

ஈரோட்டில் காவலா் வீர வணக்க நாள் தினத்தையொட்டி பணியின்போது உயிரிழந்த போலீஸாருக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் மலா் வளையம் வைத்து புதன்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

நாடு முழுவதும் பணியின்போது உயிரிழந்த போலீஸாருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் அக்டோபா் 21-ஆம் தேதி காவலா் வீர வணக்க நாளாக கடைப்பிடிக்கப்பட்டு, அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, ஈரோடு மாவட்ட ஆயுதப் படை வளாகத்தில் வீர வணக்க நாள் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் தமிழகம் உள்பட நாடு முழுவதும் பணியின்போது வீர மரணம் அடைந்த 150 போலீஸாா் மற்றும் வீரா்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டு 60 துப்பாக்கி குண்டுகள் முழங்க, மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதைத் தொடா்ந்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிரண் ஸ்ருதி ஆகியோா் பணியின்போது உயிா்நீத்த போலீஸாருக்கு மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா். பின்னா் ஏடிஎஸ்பி தங்கவேல், டிஎஸ்பி-க்கள் முத்துக்குமாா், சுகுமாா், சிவகுமாா், ஆய்வாளா்கள் மற்றும் போலீஸாா் அனைவரும் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.