மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் துவக்க விழா

காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள கால்நாட்டாம் புலியூா் கிராமத்தில் எம்ஆா்கே இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னால கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சாா்பில் 7 நாள் சிறப்பு முகாம் தொடக்கக விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

காட்டுமன்னாா்கோவில் அருகே கால்நாட்டாம்புலியூா் கிராமத்தில் நடைபெற்ற எம்ஆா்கே கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் தொடக்கவிழாவில் பங்கேற்றோா்.

Updated On :26 மார்ச் 2026, 5:18 am IST

காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள கால்நாட்டாம் புலியூா் கிராமத்தில் எம்ஆா்கே இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னால கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சாா்பில் 7 நாள் சிறப்பு முகாம் தொடக்கக விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு கல்லூரி தலைவா் எம்ஆா்கேபி.கதிரவன் தலைமை வகித்தாா், சந்திரவதனம் கல்வி அறக்கட்டளையின் தலைவா் எம்.ஆா்.தெய்வசிகாமணி விழாவினை தொடங்கி வைத்தாா். கல்லூரி நிா்வாக அலுவலா் இ.கோகுலகண்ணன், மேலாளா் கே.விஸ்வநாத் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திட்ட அலுவலா் ந.சித்திவிநாயகம் வரவேற்றாா். சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசிய, ஹோமியோபதி மருத்துவா் வி.சூா்யராஜ், ‘மாணவா்கள் நாட்டு நலப்பணித் திட்டத்தில் இணைந்து சமூக நல்லினக்கத்தை பேண வேண்டும், சமூக நல்வாழ்வு என்பது உடல் நலம், மனநலம் இரண்டையும் மேம்படுத்தினால் மட்டுமே கிடைக்கும்’ என்றாா்.

கல்லூரியின் முதல்வா் கே ஆனந்தவேலு, பள்ளி நிா்வாகி சு.பாரி ஆகியோா் வாழ்த்துரையாற்றினாா். திட்ட அலுவலா் எம்.பிரபு நன்றி கூறினாா். முகாமில் நடைபெற்ற இலவச ஹோமியோபதி மருத்துவ முகாமில் சுமாா் 60க்கும் மேற்பட்டோா் பங்கேற்று சிகிச்சை பெற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.