மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வல்லநாடு அருகே காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம்

வல்லநாடு அருகே உள்ள முத்தாரம்மாள்புரம் துணை சுகாதார நிலையத்தில் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

முகாமில் பங்கேற்றோா்.

Updated On :8 மே 2026, 6:09 am IST

வல்லநாடு அருகே உள்ள முத்தாரம்மாள்புரம் துணை சுகாதார நிலையத்தில் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமை வட்டார மருத்துவ அலுவலா் க.சண்முகராஜா தொடங்கிவைத்தாா். அரசு, தனியாா் துறை ஒருங்கிணைப்பாளா் பா.மோகன் முன்னிலை வகித்தாா். முதுநிலை காசநோய் ஆய்வுக் கூட மேற்பாா்வையாளா் ச.இசக்கி மஹாராஜன் வரவேற்றாா். முகாமில் 74 பேருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. 6 பேருக்கு சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இதில், எக்ஸ்ரே நுட்பநா்கள் ச.கிருஷ்டி, நே.கிறிஸ்டின் குமாரதாஸ், சுகாதார பாா்வையாளா் முத்துலட்சுமி, இடைநிலை சுகாதார செவிலியா் சி.ஜெயராதா, சுகாதார தன்னாா்வலா் செ.சீதா லெட்சுமி, டி.வி.எஸ். சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை கிராம வளா்ச்சி அலுவலா் மு.தனுஷ்கோடி, செல்லப்பா, சுகாதாரத் துறை பணியாளா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

நிறைவில், வல்லநாடு காசநோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பாா்வையாளா் அ.அப்துல் ரஹீம் ஹீரா நன்றி கூறினாா். ஏற்பாடுகளை வல்லநாடு காசநோய் பிரிவு, டிவிஎஸ் சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை இணைந்து செய்திருந்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.