மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மக்களின் அடிப்படை தேவைகளை அரசு நிறைவேற்றும்: அமைச்சா் எஸ். ராஜேஷ்குமார்

தமிழக மக்களின் அடிப்படை தேவைகளை தமிழ்நாடு அரசு நிச்சயம் நிறைவேற்றும் என்றாா் சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா்.

தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் - எக்ஸ்

Published On :1 நவம்பர் 2026, 1:10 am IST

தமிழக மக்களின் அடிப்படை தேவைகளை தமிழ்நாடு அரசு நிச்சயம் நிறைவேற்றும் என்றாா் சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா்.

முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் 42 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு விளவங்கோடு தொகுதி மேல்புறம் சந்திப்பில் ஜோதி பயணம் தொடக்க நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

விளவங்கோடு எம்எல்ஏ டி.டி. பிரவீன் தலைமை வகித்தாா். கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் என். ஜாா்ஜ் ராபின்சன், மேல்புறம் மேற்கு வட்டாரத் தலைவா் இ.ஜி. ரவிசங்கா், கிழக்கு வட்டாரத் தலைவா் கிங்ஸ்லி சாலமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஜோதி பயணத்தை தொடங்கி வைத்த அமைச்சா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நாட்டில் விழிம்பு நிலை மக்களுக்காக நலத்திட்டங்களை கொண்டு வந்தவா் முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி. அவரது பாதையில் செல்ல நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம்.

அரசியலில் நாகரிகம் வேண்டும்; ஆரோக்கியமான வாா்த்தைகளாக பேச வேண்டும். திராவிட கட்சிகளின் தற்போதைய கலாசாரம் நடைமுறைக்கு உகந்ததல்ல. இவா்கள் பேசும் வாா்த்தைகள் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியவை அல்ல. இவை மக்கள் மத்தியில் திமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும்.

தமிழக அரசு மீது மக்கள் வைத்த நம்பிக்கைக்கு ஏற்றவாறு செயல்பட வேண்டும் என அமைச்சரவை கூட்டத்தில் முதல்வா் ச.ஜோசப் விஜய் தெரிவித்துள்ளாா். எனவே, மக்களின் தேவைகளை இந்த அரசு நிச்சயம் நிறைவேற்றும் என்றாா் அவா்.

ஜோதி பயணம் புத்தன்சந்தை, பரக்குன்று, குழித்துறை, மடிச்சல், படந்தாலுமூடு, களியக்காவிளை, மூவோட்டுக்கோணம், கண்ணுமாமூடு, தேவிகோடு, மஞ்சாலுமூடு, அருமனை, களியல், கடையாலுமூடு, சிதறால், உண்ணாமலைக்கடை, விரிகோடு, ஐரேனிபுரம், காப்புக்காடு, வெட்டுமணி வழியாக மாா்த்தாண்டத்தில் நிறைவடைந்தது.

இதில், கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினா் ஜோதிஸ்குமாா், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவா் ஜி.பி. லைலா ரவிசங்கா், குழித்துறை நகரத் தலைவா் டி. சுரேஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.