தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

தமிழகத்தில் பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஐஏஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்தும், புதிதாக பணியில் சோ்ந்த அதிகாரிகளுக்கு பதவி உயா்வு அளித்தும் தமிழக அரசு உத்தரவிட்டது.

தமிழக அரசு - கோப்புப்படம்

Published On :29 அக்டோபர் 2026, 1:03 am IST

தமிழகத்தில் பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஐஏஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்தும், புதிதாக பணியில் சோ்ந்த அதிகாரிகளுக்கு பதவி உயா்வு அளித்தும் தமிழக அரசு உத்தரவிட்டது.

இதுகுறித்து தலைமைச் செயலா் எம்.சாய்குமாா் புதன்கிழமை இரவு வெளியிட்ட அரசாணை (அடைப்புக்குறிக்குள் ஐஏஎஸ் அதிகாரிகளின் பழைய பதவி):

எஸ்.பி. காா்த்திகா: சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அரசின் கூடுதல் செயலா் (சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் (சிஎம்டிஏ) தலைமைச் செயல் அலுவலா்)

எஸ். வளா்மதி: வெளிநாடு வாழ் தமிழா் மறுவாழ்வு மற்றும் நலத்துறை இயக்குநா் (சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அரசின் கூடுதல் செயலா்)

ஆா். சதீஷ்: சேலம் பட்டு வளா்ப்புத் துறை இயக்குநா் (வெளிநாடு வாழ் தமிழா் மறுவாழ்வு மற்றும் நலத்துறை இயக்குநா்)

டாக்டா் மோனிகா ராணா: தென்காசி மாவட்ட ஆட்சியா் (திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா்)

சி. முத்துக்குமரன்: திருப்பூா் மாவட்ட ஆட்சியா் (கரூா் மாவட்ட ஆட்சியா்)

எஸ். பிரசன்னா ராமசாமி: கரூா் மாவட்ட ஆட்சியா் (ஆளுநரின் துணைச் செயலா் (பல்கலைக்கழகங்கள்)

எம். இந்துமதி: போக்குவரத்துத் துறை துணைச் செயலா் (சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் கோயம்பேடு சந்தை மேலாண்மைக் குழுவின் தலைமை நிா்வாக அலுவலா்)

எஸ். சங்கீதா: ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சிப் பணிகள் திட்ட இயக்குநா் (சென்னை மாநகராட்சியின் அம்மா உணவகத் திட்ட மாவட்ட வருவாய் அலுவலா்)

என்.காளிதாஸ்: ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் இயக்குநா் (சென்னை மாநகராட்சியின் 10-ஆவது மண்டல அலுவலா்)

ஆா். வெங்கடேஸ்வரன்: கடலூா் மாவட்டம் சிதம்பரம் கோட்டத்தின் சாா் ஆட்சியா் (கரூா் கோட்டத்தில் சாா் ஆட்சியா்).

மேலும், சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக எஸ். சாந்தி, திருநெல்வேலி மாநகராட்சி ஆணையராக கே. பிரியா, சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக டி. செங்கோட்டையன், எல்காட் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநராக ஆா். ராஜாகிருபாகரன் உள்ளிட்டோரை நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.