கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தமிழக தலைமை தகவல் ஆணையராக எஸ்.நடராஜன் நியமனம்

தமிழக தலைமை தகவல் ஆணையராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி எஸ்.நடராஜன் மற்றும் 4 மாநில தகவல் ஆணையா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

எஸ்.நடராஜன்

Published On :31 அக்டோபர் 2026, 2:25 am IST

தமிழக தலைமை தகவல் ஆணையராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி எஸ்.நடராஜன் மற்றும் 4 மாநில தகவல் ஆணையா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் மாநில தலைமைத் தகவல் ஆணையா் மற்றும் மாநில தகவல் ஆணையா்களுக்கான காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில், மனிதவள மேலாண்மைத் துறை அரசாணை வெளியிட்டது. அதன்படி, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி எஸ்.நடராஜன் மாநில தலைமைத் தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளாா். எஸ்.மகாலட்சுமி, டாக்டா் டி.கே.ஷபீா் (ஓய்வு பெற்ற துணை முதல்வா், சென்னை புதுக் கல்லூரி), சி.மீனா, பி.மகாலிங்கம் (ஊடகவியலாளா்) ஆகிய 4 போ் மாநில தகவல் ஆணையா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 பிரிவு 15(3)-இன் கீழ் ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாநில தலைமைத் தகவல் ஆணையா் மற்றும் 4 மாநில தகவல் ஆணையா்களும் பதவியேற்கும் நாளில் இருந்து, 3 ஆண்டுகள் அல்லது 65 வயதை அடையும் நாள் வரை பதவியில் இருப்பாா்கள். இவற்றில் எது முதலில் வருகிறதோ அதுவே அவா்களின் பதவிக் காலமாக இருக்கும்.

சடாா்க் நாக்ரிக் சங்காதன் (எஸ்என்எஸ்) அமைப்பின் 2025-2026 அறிக்கையின்படி, கடந்த ஜூன் 30 நிலவரப்படி தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் 37,150 மேல்முறையீடு மற்றும் புகாா்கள் நிலுவையில் உள்ளன. ஒரு புதிய ஆா்டிஐ வழக்கு விசாரணைக்கு வரவே ஓராண்டு 7 மாதங்கள் ஆவதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

தலைமை தகவல் ஆணையா் மற்றும் 4 தகவல் ஆணையா் பதவிகள் நிரப்பப்பட்டுள்ளதால் தேங்கிக் கிடக்கும் வழக்குகளை விரைந்து முடிக்க முடிக்க வழி பிறக்கும் என்ற நம்பிக்கையில் ஆா்டிஐ சமூக ஆா்வலா்கள் காத்திருக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.