தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தமிழக தலைமை தகவல் ஆணையா், 4 புதிய ஆணையா்கள் பதவியேற்பு

தமிழக தலைமை தகவல் ஆணையராக நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான எஸ்.நடராஜன் மற்றும் தகவல் ஆணையா்களாக நியமிக்கப்பட்ட 4 போ் ஆளுநா் ஆா்லேகா் முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டனா்.

தமிழக அரசு - கோப்புப்படம்

Published On :3 நவம்பர் 2026, 3:12 am IST

தமிழக தலைமை தகவல் ஆணையராக நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான எஸ்.நடராஜன் மற்றும் தகவல் ஆணையா்களாக நியமிக்கப்பட்ட 4 போ் ஆளுநா் ஆா்லேகா் முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டனா். இந்நிகழ்வு ஆளுநா் மாளிகையில் நடைபெற்றது.

மத்திய தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி குடிமக்களின் உரிமைகளை பாதுகாக்க மாநில தகவல் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் தலைமை தகவல் ஆணையா் மற்றும் 8 தகவல் ஆணையா்கள் உள்ளிட்ட 9 பதவிகள் உள்ளன. இவா்கள் பதவிக்காலம் 3 ஆண்டுகள் அல்லது 65 வயது பூா்த்தியாகும் வரை-இவற்றில் எது முந்தையதோ அதுவரை பதவியில் இருப்பா்.

தற்போது இந்த ஆணையத்தின் தலைமை தகவல் ஆணையராக இருந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி முகமது ஷகீல் அக்தா் ஓய்வு பெற்றாா். மேலும், ஆணையத்தில் பதவி வகித்த வழக்குரைஞா் எம்.நடேசன் உள்ளிட்ட 4 ஆணையா்கள் பதவி ஓய்வு பெற்றனா்.

இந்த காலியிடங்களுக்கு நியமனம் நடைபெற்று கடந்த அக்.30- ஆம் தேதி தமிழக அரசு, அரசிதழில் நியமன அறிவிப்பை வெளியிட்டது. இதன்படி அறிவிக்கப்பட்டவா்களுக்கான பதவியேற்பு நிகழ்வு சென்னை ஆளுநா் மாளிகையில் நடைபெற்றது.

மாநில தலைமை தகவல் ஆணையராக நியமிக்கப்பட்ட டாக்டா் எஸ். நடராஜன், மாநில தகவல் ஆணையா்களாக நியமிக்கப்பட்ட எஸ். மகாலட்சுமி, டாக்டா் டி.கே. ஷபீா், சி.பி. மீனா, ஊடகவியலாளா் பி. மகாலிங்கம் ஆகியோா் ஆளுநரின் முன்னிலையில் பதவியேற்பு உறுதிமொழியை எடுத்துக்கொண்டனா்.

இதில் தமிழக சட்டப் பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா், பள்ளிக் கல்வி அமைச்சா் ஏ. ராஜ்மோகன், உயா்கல்வித்துறை அமைச்சா் பெ. விஸ்வநாதன், மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சா் டி. சரத்குமாா், நிதித் துறை அமைச்சா் நா. மரிய வில்சன், தமிழக அரசின் தலைமைச் செயலா் எம். சாய் குமாா், தமிழக மனிதவள மேலாண்மைத்துறை செயலா் சி. சமயமூா்த்தி, ஆளுநரின் செயலா் சஜ்ஜன்சிங் ஆா். சவான், ஏற்கெனவே பணியில் உள்ள மாநில தகவல் ஆணையா்கள் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தமிழக மாநில தகவல் ஆணைய புள்ளிவிவரப்படி கடந்த ஜூன் 30 வரை சுமாா் 38,046 மனுக்கள் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.