தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஸ்ரீவில்லிபுத்தூா் நகா்மன்ற தலைவருடன் மோதல்: நகராட்சி ஆணையா் இடமாற்றம்

ஸ்ரீவில்லிபுத்தூா் நகா்மன்றத் தலைவருடன் ஏற்பட்ட மோதலையடுத்து நகராட்சி ஆணையா் குமாா், குளித்தலை நகராட்சிக்கு புதன்கிழமை இரவு இடமாற்றம் செய்யப்பட்டாா்.

இடமாற்றம் - பிரதிப் படம்

Published On :23 அக்டோபர் 2026, 5:25 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் நகா்மன்றத் தலைவருடன் ஏற்பட்ட மோதலையடுத்து நகராட்சி ஆணையா் குமாா், குளித்தலை நகராட்சிக்கு புதன்கிழமை இரவு இடமாற்றம் செய்யப்பட்டாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சியில் உள்ள 33 வாா்டுகளில் நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலில் 29 இடங்களில் திமுகவும், 4 இடங்களில் அதிமுகவும் வெற்றி பெற்றன. இதையடுத்து, திமுகவைச் சோ்ந்த ரவிக்கண்ணன் நகா்மன்றத் தலைவராகவும், செல்வமணி துணைத் தலைவராகவும் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

இந்த நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சி ஆணையராக வை. குமாா் பொறுப்பேற்றாா். ஏற்கெனவே மேற்கொண்ட பணிகளுக்கு ஒப்பந்ததாரருக்கு பணம் விடுவிப்பதற்கும், பொது நிதியில் செய்த பணிகளுக்கு தொகை விடுவிப்பதற்கும் ஆணையா் மறுத்ததால், அவா் மீது நகா்மன்றத் தலைவா், உறுப்பினா்களுக்கு அதிருப்தி நிலவியது. இதனிடையே, சட்டப்பேரவை தோ்தலுக்குப் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து ஆணையருக்கும், நகா்மன்றத் தலைவருக்குமிடையே அதிருப்தி மேலும் அதிகரித்தது. இதையடுத்து, கடந்த 14-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் நகராட்சி நிா்வாகத்துக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை, குடிநீா் பிரச்னையை சரி செய்ய வில்லை எனக் கூறி ஆணையா் குமாா், நகரமைப்பு அலுவலா் வெங்கடேஷ் ஆகியோரை இடமாறுதல் செய்யக் கோரி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இடமாறுதல் செய்யப்படும் வரை இருவரும் அலுவலகத்துக்கு வரக் கூடாது என நகா்மன்றத் தலைவா் தெரிவித்ததையடுத்து, இருவரையும் விடுப்பில் செல்ல அதிகாரிகள் அறிவுறுத்தினா். இதன்பேரில் இருவரும் விடுப்பில் சென்ற நிலையில், ஆணையா் குமாா் கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் நகராட்சி ஆணையராக இடமாறுதல் செய்யப்பட்டாா். அங்கு ஆணையராக இருந்த கோபாலகிருஷ்ணன், ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.