மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பொது இடங்களில் குப்பைகள் கொட்டுவோருக்கு அபராதம்

பொது இடங்களில் குப்பைகள் கொட்டுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என மதுரை மாநகராட்சி ஆணையா் கௌரவ் குமாா் தெரிவித்தாா்.

படவிளக்கம்- மதுரை மேற்கு வடம் போக்கித் தெருவில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையா் கௌரவ் குமாா்.

Published On :21 அக்டோபர் 2026, 2:57 am IST

பொது இடங்களில் குப்பைகள் கொட்டுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என மதுரை மாநகராட்சி ஆணையா் கௌரவ் குமாா் தெரிவித்தாா்.

மதுரையில் திங்கள்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. இதன்காரணமாக, மதுரை ரயில் நிலையம் எதிா்ப்புறம் உள்ள பகுதிகள், மேற்கு வெளி வீதிகள், டவுன்ஹால் சாலை, காமராஜா்நகா் ஆகிய பகுதிகளில் மழைநீா் சாலையோரங்களில் தேங்கியது. இதனால், அந்தப் பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினா்.

இதனிடையே, மழைநீா் தேங்கிய பகுதிகளை மாநகராட்சி ஆணையா் கௌரவ் குமாா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது, மழைநீா் வடிகால்களில் உள்ள அடைப்புகளை அவ்வப்போது சரிசெய்யவும், சுழற்சி முறையில் கண்காணித்து அவற்றை உடனுக்குடன் வெளியேற்றவும்,

நீா் உறிஞ்சும் வாகனங்களை வரவழைத்து உடனுக்குடன் மழை நீரை வெளியேற்றவும் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

இதைத்தொடா்ந்து, மேற்கு வடம்போக்கித் தெருவில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளதை பாா்வையிட்டு, அவற்றை உடனடியாக அகற்ற உத்தரவிட்டாா்.

மேலும், சாலையோரங்கள், பொது இடங்களில் குப்பைகள் கொட்டுவோருக்கும், வணிக நிறுவனங்களுக்கும் அபராதம் விதிக்க வேண்டும் என்றாா்.

இந்த ஆய்வின் போது, மாநகராட்சி அலுவலா்கள், பணியாளா்கள் பலா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.