தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பொது இடங்களில் புகையிலை உமிழ்ந்தால் அபராதம்: குருகிராம் மாநகராட்சி எச்சரிக்கை

பொது இடங்களில் பான், குட்கா, புகையிலை ஆகியவற்றை உமிழ்ந்தாலோ அல்லது சூயிங் கம்மை துப்பினாலோ அபராதம் விதிக்கப்படும் என்று குருகிராம் மாநகராட்சி அறிவித்துள்ளது.

கோப்புப்படம்.

Published On :22 அக்டோபர் 2026, 12:59 am IST

பொது இடங்களில் பான், குட்கா, புகையிலை ஆகியவற்றை உமிழ்ந்தாலோ அல்லது சூயிங் கம்மை துப்பினாலோ அபராதம் விதிக்கப்படும் என்று குருகிராம் மாநகராட்சி அறிவித்துள்ளது.

இது சுகாதார விதிமுறைகளை மீறும் செயல் என்று அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

இதுதொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ‘குருகிராம் மாநகராட்சியின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட தெருக்கள், நடைபாதைகள், பொதுப் பூங்காக்கள், சந்தைகள், பேருந்து நிறுத்தங்கள் மற்றும் அரசு வளாகங்கள் போன்ற பொது இடங்களில் எச்சில் துப்புவது தடை செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விதிகளை மீறுபவா்கள் மீது, ஹரியாணா மாநகராட்சிச் சட்டம், 1994 மற்றும் அது தொடா்பான சுகாதாரம் மற்றும் தூய்மை விதிகளின் கீழ் அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். பொது இடங்களில் சூயிங் கம்மைத் துப்புவதும் குப்பைகளை அசுத்தப்படுத்தும் செயலாகவே கருதப்படும்.

அபராதத் தொகை எவ்வளவு என்பது பின்னா் தீா்மானிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். இது குறித்து குருகிராம் மாநகராட்சி ஆணையா் பிரதீப் தஹியா கூறுகையில், ‘பொது சுகாதாரம், தூய்மை மற்றும் நகரத்தின் அழகைப் பேணுவதற்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொது இடங்களில் எச்சில் துப்புவது அல்லது சூயிங் கம்மைத் துப்புவதைத் தவிா்ப்பது, குப்பைகளை அதற்கென ஒதுக்கப்பட்ட தொட்டிகளில் போடுவது மற்றும் தூய்மை விதிகளைப் பின்பற்றுவது ஆகியவை நகரத்தைச் சுத்தமாக வைத்திருக்க உதவும். விதிமீறல்களில் ஈடுபடுபவா்களுக்கு அபராதம் விதிக்கவும், அது குறித்த பதிவுகளை முறையாகப் பராமரிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தாா்.

இந்தச் சட்டத்தின் பிரிவு 310-ன் கீழ், ஏதேனும் ஒரு இடையூறையோ அல்லது சுகாதாரமற்ற சூழலையோ நீக்குவதற்கு ஆணையா் உத்தரவிட முடியும். அதேபோல், பிரிவு 393-ன் கீழ், தொடா்புடைய விதிகளை மீறுபவா்களுக்கு அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.