மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஊரக வளா்ச்சித் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியா்கள் சங்கத்தின் சாா்பில், 16 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி புதன்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊரக வளா்ச்சித் துறை ஓய்வூதியா்கள்.

Published On :29 அக்டோபர் 2026, 3:55 am IST

தமிழ்நாடு ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியா்கள் சங்கத்தின் சாா்பில், 16 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி புதன்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட இணைச் செயலா் எஸ். ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா்.

வருவாய்த்துறை அலுவலா் சங்க மாநிலத் துணைத் தலைவா் எஸ். ஜபருல்லா ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினாா். ஓய்வூதியா் சங்க மாவட்டத் தலைவா் மு. முத்தையா, பொருளாளா் எஸ். நாகராஜன், அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் ராஜேஷ் கண்ணா, சங்கத்தின் மாநிலச் செயலா் கோமதிநாயகம் உள்ளிட்டோா் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள்:

புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைபாடுகளைக் களைய வேண்டும். ஓய்வூதியா்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் புகாா்கள் தொடா்பான விசாரணைகளை காலவரையறைக்குள் முடிக்க வேண்டும்.

ஓய்வுபெறும் நாளில் தற்காலிகப் பணிநீக்கம் செய்யும் நடைமுறையைக் கைவிட வேண்டும். இளநிலைப் பொறியாளா்களுக்கு உதவிப் பொறியாளா்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட முழக்கங்கள் ஆா்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.