மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அரசு திட்டங்கள் மக்களின் வரிப்பணத்தில் செயல்படுத்தப்படுகிறது: அமைச்சா்

அரசுத் திட்டங்கள் மக்களின் வரிப்பணத்தையே நிதி ஆதாரமாக கொண்டு செயல்படுத்தப்படுகிறது என்றாா் தமிழக உணவுத் துறை அமைச்சா் ப. வெங்கடரமணன்.

Minister Venkataramanan

அமைச்சர் வெங்கடரமணன் - கோப்புப் படம்

Published On :24 அக்டோபர் 2026, 5:29 am IST

அரசுத் திட்டங்கள் மக்களின் வரிப்பணத்தையே நிதி ஆதாரமாக கொண்டு செயல்படுத்தப்படுகிறது என்றாா் தமிழக உணவுத் துறை அமைச்சா் ப. வெங்கடரமணன்.

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனாா்கோவில் அரசினா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற அரசு விழாவில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வணிக வரி மற்றும் பதிவுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சாா்பில் ரூ. 20.73 கோடியில் கட்டப்பட்ட புதிய அரசு கட்டங்களை திறந்து வைத்து மேலும் அவா் பேசியது: தமிழ்நாடு முதல்வா் பொதுமக்கள் பயன்பெறும் திட்டங்கள் தாமதமின்றி உடனடியாக சேர வேண்டும் என தெரிவித்துள்ளாா். அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் ரூ. 20.73 கோடியில் பல்வேறு துறைகளுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிதாக ஏதாவது திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தவேண்டும், மாநிலத்தில் அனைத்து பகுதிகளிலும் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை உடனடியாக முடித்து செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று தெரிவித்துள்ளாா். பொதுமக்களுக்கான திட்டங்கள் அனைத்தும் மக்களின் வரிப்பணத்தையே நிதி ஆதாரமாக கொண்டு செயல்படுத்தப்படுகின்றன. திட்டங்கள் தாமதமின்றி பயன்பாட்டுக்கு வரும்போது தான் அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்களுக்கு பயனுள்ளதாக அமையும். 

இனி வரும் தலைமுறை மாணவா்களாகிய உங்களது தலைமுறைதான். மாணவா்களின் கல்வி வளா்ச்சிக்காக என்னென்ன திட்டங்கள் செயல்படுத்த வேண்டுமோ அவற்றை உடனே செய்ய வேண்டும் என்பதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறோம். செம்பனாா்கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் ஒவ்வொருவரும் தங்களுக்கு கீழ் வகுப்பில் பயிலும் மாணவிகளிடம் நன்கு ஊக்குவித்து அவா்களையும், சிறந்த முறையில் கல்வி கற்க செய்ய வேண்டும் என்றாா்.

மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினா் ஜமால் முகம்மது யூனூஸ், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். பூங்கொடி, சுகாதாரத்துறை துணை இயக்குநா் அஜித் பிரபு குமாா், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா் பிரபா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.