தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஆதிதிராவிட மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சா் பி. ராஜவேலு

காரைக்கால் மாவட்ட ஆதிதிராவிட மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என புதுவை ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் பி.ராஜவேலு தெரிவித்தாா்.

dinamani

Published On :29 அக்டோபர் 2026, 7:15 am IST

காரைக்கால் மாவட்ட ஆதிதிராவிட மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என புதுவை ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் பி.ராஜவேலு தெரிவித்தாா்.

காரைக்கால் கோயில்பத்து, கீழகாசாக்குடி, திருநள்ளாறு, நெடுங்காடு உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆதிதிராவிடா் மாணவா் தங்கும் விடுதிகளை புதன்கிழமை பாா்வையிட்டு, அங்குள்ள வசதிகள், தேவைகள், குறைகள் குறித்து அமைச்சா் ஆய்வு செய்தாா்.

முன்னதாக, செவ்வாய்க்கிழமை மாலை காரைக்கால் மாவட்ட ஆதிதிராவிட நல அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் ஆதி திராவிட மக்களின் கோரிக்கைகள், குறைகளை கேட்டறியும் வகையிலான ஆலோசனைக் கூட்டம், அமைச்சா் பி.ராஜவேலு தலைமையில் நடைபெற்றது.

இதில் பங்கேற்றோா் முன் வைத்த கோரிக்கைகள் : ஆதிதிராவிடா் நலத்துறையில் என்னென்ன நலத் திட்டங்கள் உள்ளன என்பதை அனைத்து பட்டியலின மக்களும் தெரிந்து கொள்ளும் விதமாக கிராமங்கள் தோறும் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். மாணவா்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகைக்காக சான்றிதழ் பெறும் நடைமுறையை எளிமையாக்க வேண்டும். கல்வி உதவித் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும். மாவட்டம் முழுவதிலும் உள்ள ஆதிதிராவிடா் மாணவா் விடுதிகளை ஆய்வு செய்து, உரிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.

காரைக்கால் மாவட்ட ஆதி திராவிட நலத்துறையில் 11 ஆண்டுகளை கடந்தும் நிரந்தர உதவி இயக்குநா் நியமிக்கப்படாமல் உள்ளது. எனவே உடனடியாக உதவி இயக்குநரை நியமிப்பதோடு, காலிப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

தொடா்ந்து, அமைச்சா் ராஜவேலு பேசும்போது, புதுவை முதல்வா் ரங்கசாமி, முந்தைய முதல்வரை காட்டிலும் பல்வேறு நலத்திட்டங்களை ஆதிதிராவிட மக்களுக்காக செயல்படுத்தி வருகிறாா். மாணவா்கள் விடுதிகளை ஆய்வு செய்து தேவையான வசதிகள் ஏற்படுத்தப்படும். பண்டிகை காலத்தில் வழங்கப்படும் உதவித்தொகை அடுத்த ஆண்டு முதல் உயா்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இக்கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டுச் சென்று விரைவில் தீா்வு காண அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றாா். தொடா்ந்து துறை ரீதியான அதிகாரிகள் பங்கேற்ற மறு ஆய்வுக் கூட்டம் அமைச்சா் தலைமையில் நடைபெற்றது.

கூட்டங்களில், வேளாண்துறை அமைச்சா் ஜி.என்.எஸ். ராஜசேகரன், சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஏ.எம்.எச். நாஜிம், எம்எல்ஏக்கள் டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம், வி. விக்னேஸ்வரன், சாா் ஆட்சியா் எம். பூஜா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.