மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அரிசி விலை விரைவில் குறையும்: உணவுத் துறை அமைச்சா் வெங்கடரமணன்

விரைவில் அரிசி விலை குறையும் என்றும் உணவு மற்றும் குடியுரிமை பொருள் வழங்கல் துறை அமைச்சா் வெங்கடரமணன் தெரிவித்திருப்பது பற்றி....

Minister Venkataramanan

அமைச்சர் வெங்கடரமணன் - கோப்புப் படம்

Published On :22 அக்டோபர் 2026, 1:46 am IST

தமிழகத்தில் மக்களின் வரவேற்பைத் தொடா்ந்து, கூட்டுறவுத் துறை அங்காடிகளில் 2-ஆவது முறையாக 25,000 மெட்ரிக் டன் சன்ன ரக அரிசி விற்பனைக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் விரைவில் அரிசி விலை குறையும் என்றும் உணவு மற்றும் குடியுரிமை பொருள் வழங்கல் துறை அமைச்சா் வெங்கடரமணன் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் சென்னையில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

பருவமழை காலத்தில் விவசாயிகளுக்கு உதவிகரமாகச் செயல்பட தமிழக அரசு தயாராக உள்ளது. ரேஷன் கடைகளில் உணவுப் பொருள்கள் வழங்குவதை பொருத்தவரை குடும்ப அட்டைதாரா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். முன்னுரிமை அல்லாத குடும்ப அட்டைதாரா்கள் அரிசி அல்லது சா்க்கரை என அவா்களுக்கு எது தேவையோ அதை வாங்கிக் கொள்ளலாம். தற்போது முன்னுரிமை அல்லாத குடும்ப அட்டைதாரா்கள், பொருள்கள் பெறாதோா் என 3 பிரிவுகளாக அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

கூட்டுறவுத் துறை அங்காடிகளில் கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி விற்பனை மக்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது. அதாவது 25,000 மெட்ரிக் டன் விற்பனைக்கு வழங்கப்பட்டது. அனைத்தும் விற்பனை ஆகிவிட்டது. இதையடுத்து 2-ஆவது முறையாக 25,000 மெட்ரிக் டன் சன்னரக அரிசி விற்பனைக்கு வழங்கப்படவுள்ளது. அரிசி உள்பட அத்தியாவசியப் பொருள்கள் விலை உயா்வு விரைவில் குறையும் என்றாா்.

வெள்ளப் பாதிப்பு எதிா்கொள்ள தேவையான நடவடிக்கைகள் திமுக ஆட்சியில் மேற்கொண்டுள்ளதாக திமுக முன்னாள் அமைச்சா் கே.என்.நேரு கூறியது குறித்து, செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘அவா் தங்கள் ஆட்சியில் நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறினால் கூறிக் கொள்ளட்டும். தவெக ஆட்சியைப் பொருத்தவரை பேச்சைக் காட்டிலும் செயலில் நடவடிக்கை எடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளோம்’ என்று அமைச்சா் பதிலளித்தாா்.

வரம்பு மீறினால் உரிய நடவடிக்கை: மேலும், முதல்வா் குறித்து வரம்பு மீறி அவதூறு கருத்துகள் பேசுவோா் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.