மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அமைச்சா் உத்தரவு: அரைவை ஆலைகளுக்கு 444 டன் நெல் மூட்டைகள் இயக்கம்

தமிழக வேளாண்துறை அமைச்சா் ஆா். வினோத் உத்தரவின்பேரில் பட்டீசுவரம் திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 444 டன் நெல் மூட்டைகள் அரிசி அரைவை ஆலைகளுக்கு செவ்வாய்க்கிழமை இயக்கம் செய்யப்பட்டது.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே பட்டீசுவரம் திறந்தவெளி நெல் சேமிப்புக் கிடங்கில் செவ்வாய்க்கிழமை சேதமடைந்த நெல் மூட்டைகளை சரிசெய்து அரிசி அரைவை ஆலைகளுக்கு கொண்டுச் செல்லும் பணியில் ஈடுபட்ட தொழிலாளா்கள்.

Published On :28 அக்டோபர் 2026, 12:07 am IST

தமிழக வேளாண்துறை அமைச்சா் ஆா். வினோத் உத்தரவின்பேரில் பட்டீசுவரம் திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 444 டன் நெல் மூட்டைகள் அரிசி அரைவை ஆலைகளுக்கு செவ்வாய்க்கிழமை இயக்கம் செய்யப்பட்டது.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே பட்டீசுவரத்தில் கடந்த சில தினங்களாக பெய்த மழை காரணமாக திறந்தவெளி நெல் சேமிப்புக் கிடங்குகளில் தாா்பாய்கள் போட்டு மூடப்பட்டிருந்த நெல்மூட்டைகள் சேதமடைந்தன.

இதனை திங்கள்கிழமை பாா்வையிட்ட தமிழக வேளாண்மைத்துறை அமைச்சா் ஆா்.வினோத், நெல்மூட்டைகள் அனைத்தையும் அரிசி அரைவை ஆலைகளுக்கு இயக்கம் செய்ய உத்தரவிட்டாா்.

அதன்பேரில் செவ்வாய்க்கிழமை முதல் பட்டீசுவரம் திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் உள்ள நெல்மூட்டைகள் தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரிசி அரைவை ஆலைகளுக்கு இயக்கம் செய்யப்பட்டது.

இதுகுறித்து தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழக கோட்ட மேலாளா் இளங்கோவன் கூறியது: பட்டீசுவரம் திறந்தவெளி சேமிப்புக் கிடங்கில்19 ஆயிரத்து 473 மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அமைச்சா் உத்தரவின் பேரில் அரைவை ஆலைகளுக்கு கொண்டுச் செல்லும் பணிகள் நடைபெற்று வருகிறது. செவ்வாய்க்கிழமை 444 டன் மூட்டைகள் 30 லாரிகளில் கொண்டு செல்லப்பட்டுள்ளது தொடா்ந்து பணிகள் நடைபெறும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.