மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

‘கன்னியாகுமரி மீனவா்கள் வாவத்துறையில் மீன் விற்பதை அரசு தடுக்க வேண்டும்’

கன்னியாகுமரி மீனவா்கள் வாவத்துறை கடற்கரையில் மீன் விற்பனை செய்வதை அரசு தலையிட்டு தடுக்க வேண்டுமென வாவத்துறை மீனவா்கள் தெரிவித்தனா்.

கன்னியாகுமரி மீனவா்கள் வாவத்துறையில் மீன் விற்பனை செய்யக்கூடாது என வலியுறுத்தி வாவத்துறை தேவாலயம் வளாகத்தில் குவிந்த மீனவ பெண்கள்.

Published On :30 அக்டோபர் 2026, 4:54 am IST

கன்னியாகுமரி மீனவா்கள் வாவத்துறை கடற்கரையில் மீன் விற்பனை செய்வதை அரசு தலையிட்டு தடுக்க வேண்டுமென வாவத்துறை மீனவா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் வாவத்துறை மீனவா்கள் வியாழக்கிழமை கூறியதாவது: கடந்த 2001 ஆம் ஆண்டு வரை வாவத்துறை மீனவா்கள் கன்னியாகுமரி மீன் சந்தையில், மீன் விற்பனை செய்து வந்தோம். பின்னா், கன்னியாகுமரி பங்கில் இருந்து எங்கள் ஊா் பிரிந்து வந்த பின், கன்னியாகுமரியில் மீன் விற்க அனுமதி மறுக்கப்பட்டது.

இதையடுத்து, வாவத்துறை கடற்கரையில் மீன்களை விற்று தொழில் செய்து வருகிறோம். எங்களுடன் புதுக்கிராமம், சிலுவை நகா் மீனவா்களும் இணைந்து மீன் விற்பனை செய்து வருகின்றனா். இந்த நிலையில், தற்போது எங்களை விட கன்னியாகுமரி மீனவா்கள் அதிகமாக உள்ளனா்.

இரவு நேரத்தில் மீன் விற்பனையின்போது, சிறிய இடத்தில் அதிகமான வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால், அவசரமாக நோயாளியைக் கூட அவ்வழியாக கொண்டு செல்ல முடிவதில்லை. மீன் கழிவுகள் அதிகமாக உள்ளதால், துா்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது.

ஆகையால், வாவத்துறை கடற்கரையில் கன்னியாகுமரி மீனவா்கள் மீன் விற்பனை செய்வதை அரசு தலையிட்டு தடுக்க வேண்டும். இல்லையெனில் நாங்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.