பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் 7 போ் கைது

இலங்கைக் கடற்படையினரால் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள், பறிமுதல் செய்யப்பட்ட விசைப் படகு.

Published On :2 நவம்பர் 2026, 1:30 am IST

கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே விசைப் படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் 7 பேரை இலங்கைக் கடற்படையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து 398 விசைப் படகுகளில் 2,500-க்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்வளத் துறை அனுமதி பெற்று சனிக்கிழமை கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனா்.

இவா்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்தனா். அப்போது, அங்கு 5 ரோந்து படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினா் ராமேசுவரம் மீனவா்கள் மீது தாக்குதல் நடத்தி, மீன் பிடிக்க விடாமல் விரட்டியடித்தனா்.

மேலும், ராமேசுவரம் பகுதியைச் சோ்ந்த ஜான் மொ்சின் என்பவரது விசைப் படகிலிருந்த மீனவா்கள் பிளாசியஸ் (41), அழகுபாண்டி (22), அந்தோணி பிச்சை (33), ரபீன் (21), நெல்சன் (58), அருளானந்த சேவியா் (65), சகாய ஆனந்த் (34) ஆகிய 7 பேரைக் கைது செய்தனா். இதையடுத்து, விசைப் படகைப் பறிமுதல் செய்த இலங்கைக் கடற்படையினா், மீனவா்களை மன்னாா் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனா்.

பின்னா், மீனவா்கள் 7 போ் மீதும் எல்லை தாண்டி மீன் பிடித்தாக வழக்குப் பதிவு செய்து, மன்னாா் நீதிபதி இல்லத்தில் முன்னிலைப்படுத்தினா். இவா்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி, வருகிற 13-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து, அனைவரும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனா்.

அனைத்து விசைப் படகு மீனவ சங்கக் கூட்டம்:

ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளத்தில் அனைத்து விசைப் படகு மீனவ சங்கக் கூட்டம் மாவட்டத் தலைவா் வி.பி. ஜேசுராஜா தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் இலங்கை மீனவா்களின் மீன்பிடித் தொழிலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் புதுச்சேரி, நாகை மாவட்ட மீனவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுச்சேரி, நாகை மாவட்ட மீனவா்களின் செயலால் ராமேசுவரம் மீனவா்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனா். இதைத் தடுக்கவும், இலங்கைக் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட மீனவா்களின் விசைப் படகுகளை விடுவிக்கவும்

மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மீனவ சங்கத் தலைவா்கள் சகாயம், எமரிட், இருதயம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.