
ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் கைது!
ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை இலங்கைக் கடற்படை கைது செய்துள்ளது குறித்து...

சிறை பிடிக்கப்பட்ட 7 பேர். - படம் - தினமணி
ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் 7 பேரை இலங்கைக் கடற்படை கைது செய்துள்ளது.
கச்சத்தீவு நெடுந்தீவுக்கு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் ஏழு பேருடன் ஒரு விசைப்படகை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துச் சென்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று 398 விசை படங்களில் 2500 க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்
இன்று அதிகாலையில் கச்சத்தீவு நெடுந்தீவுக்கு இடையே மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது ஐந்து ரோந்து படகில் வந்த இலங்கைக் கடற்படை, மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி மீன் பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர்.
இதில் ஜான் மெர்சின் என்பவரது விசைப்படகை சிறைபிடித்தனர். படகில் இருந்த பிளாசியஸ் 41,அழகுபாண்டி 22, அந்தோணி பிச்சை 33, ரபீன் 21, நெல்சன் 58, அருளானந்த சேவியர் 65, சகாய ஆனந்த் 34, ஆகிய 7 மீனவர்களை எல்லை தாண்டி மீள்பிடித்ததாக கூறி சிறை பிடித்து சென்றுள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகு.
Summary
The Sri Lankan Navy has arrested seven fishermen who had set out for fishing from the Rameswaram harbor.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







