பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அன்னூர் அருகே திடீரென தீப்பிடித்து எரிந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!

அன்னூர் அருகே கடையின் முன் நிறுத்தப்பட்டிருந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்தது.

fire

அன்னூர் அருகே திடீரென தீப்பிடித்து எரிந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர். - படம்: தினமணி

Published On :1 நவம்பர் 2026, 8:17 am IST

அன்னூர்: கோவை மாவட்டம் அன்னூர் - கோவை சாலையில் உள்ள கே.ஜி. பள்ளி அருகே, கடையின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்து முற்றிலும் சேதமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று (நவ. 1) காலை அன்னூர்-கோவை சாலையில் கே.ஜி. பள்ளி அருகேயுள்ள ஒரு கடையின் முன்பு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக, அந்த வாகனத்திலிருந்து திடீரெனப் புகை வெளியேறி, அடுத்த சில விநாடிகளில் தீப்பற்றி எரியத் தொடங்கியது.

வாகனத்தில் இருந்து பயங்கரமாக தீப்பிடித்து எரிவதைக் கண்ட அந்தவ் வழியாகச் சென்ற பொதுமக்கள் மற்றும் வழிப்போக்கர்கள், உடனே அன்னூர் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அன்னூர் தீயணைப்புத் துறையினர், உடனடியாகச் செயல்பட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், தீயின் வீரியம் அதிகமாக இருந்ததால், அந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் முழுவதுமாக எரிந்து சாம்பலானது.

காலை நேரத்திலேயே மக்கள் நடமாட்டம் மிகுந்த முக்கியச் சாலையில் இந்த விபத்து நடந்ததால், அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பும் அதிர்ச்சியும் நிலவியது. இந்தச் சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Summary

An electric scooter parked in front of a shop near Annur caught fire.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.