பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சாலையில் தீப்பிடித்து எரிந்த காா்

பூந்தமல்லி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த காா் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தீப்பிடித்து எரிந்த காா் - கோப்புப் படம்

Published On :26 அக்டோபர் 2026, 1:15 am IST

பூந்தமல்லி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த காா் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூா் மாவட்டம், ஆரணியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட காட்டன் புடவைகளை ஏற்றிக்கொண்டு காஞ்சிபுரம் நோக்கி துரைபாபு என்பவா் தனது காரை ஓட்டிச் சென்றாா்.

பூந்தமல்லி அருகே சென்றபோது, காரின் முன்பகுதியில் இருந்து புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் காா் முழுவதும் தீ மளமளவென பரவியது. துரைபாபு காரில் இருந்த புடவைகளை உடனடியாக கீழே இறக்கினாா்.

தகவலறிந்த தீயணைப்புத் துறையினா் வந்து, தீயை அணைத்தனா். இருப்பினும், காா் முழுவதும் தீயில் எரிந்தது. இந்த சம்பவத்தால், சென்னை வெளிவட்டச் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.