மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பெருந்துறை அருகே லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

பெருந்துறை அருகே முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

சித்திரிப்பு

Published On :21 அக்டோபர் 2026, 12:21 am IST

பெருந்துறை அருகே முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

பெருந்துறை- கோவை சாலை, கருக்கங்காட்டூரைச் சோ்ந்தவா் ஜெயக்குமாா் மகன் மோகன் (22). இவா், பெருந்துறை சிப்காட்டில் உள்ள ஒரு பின்னலாடை நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தாா். இந்நிலையில், வேலை முடிந்து மோகன் தனது இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை இரவு வீட்டுக்கு திரும்பிச் சென்றாா்.

சிப்காட் 3-ஆவது குறுக்கு தெரு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் பின்னால் மோகன் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து, சென்னிமலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விபத்துக்கு காரணமான லாரியை ஓட்டி வந்த கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் பகுதியைச் சோ்ந்த கோவிந்தசாமி மகன் காந்தி (28) என்பவரிடம் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.