பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்: மீன்வளத் துறை எச்சரிக்கை

ஆழ்கடலுக்குச் சென்றுள்ள விசைப்படகுகள் அனைத்தும் உடனடியாக கரைக்குத் திரும்புமாறு தமிழ்நாடு மீன்வளத் துறை உத்தரவிட்டுள்ளது குறித்து...

Fishermen advised not to venture into the sea

நாகை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப் படகுகள். - கோப்புப்படம்

Published On :26 அக்டோபர் 2026, 11:44 am IST

ஆழ்கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றுள்ள விசைப்படகுகள் அனைத்தும் உடனடியாக கரைக்குத் திரும்புமாறு தமிழ்நாடு மீன்வளத் துறை உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆறு மணி நேரத்தில், மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவியது. இது தெற்கு திசையில் நகா்ந்து வலுப்பெற்று, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, திங்கள்கிழமை (அக். 26) காலை 5.30 மணிக்கு மத்திய கிழக்கு அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் 'அர்னாப்' புயலாக உருவாகியுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுவடைந்து தீவிரப் புயலாகவும், மிக தீவிரப் புயலாகவும் மாறி, அக்டோபர் 28-ஆம் தேதி அதிகாலை கரையைக் கடக்கக்கூடும். 'அர்னாப்' கரையைக் கடக்கும்போது காற்றின் வேகம் 140 கி.மீ. வரை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில், சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் கரையிலே தங்கியுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்திற்கு சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விசைப்படகு மீனவர்கள் இன்று மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்லவில்லை.

ஆந்திரப் பிரதேச முதல்வர் என். சந்திரபாபு நாயுடு, நெருங்கி வரும் ‘அர்னாப்’புயலால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க, அனைத்து நிலைகளிலும் அதிகாரிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும், முழுமையான முன்னேற்பாடுகளைச் செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், தமிழக மீனவர்களுக்கு மீன்வளத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதில், வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்ற நிலையில், கிழக்கு கடற்கரையில் இருந்து ஆழ்கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றுள்ள விசைப்படகுகள் அனைத்தும் உடனடியாக கரைக்குத் திரும்புமாறும், மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு செல்லக் கூடாது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Fishermen advised not to venture into the sea: Fisheries Department warning

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.