மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பவானிசாகா் அணை மீனவா்கள் வேலை நிறுத்தம்

பவானிசாகா் அணை மீன்வா்கள் மீன் பிடி கூலி உயா்வுகேட்டு பவானிசாகா் அணை மீன்வளத் துறை அலுவலகம் முன்பாக குடும்பத்துடன் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பவானிசாகா்  மீன் வளா்ச்சிக்  கழக  அலுவலகம்  முன்பாக  செவ்வாய்க்கிழமை  வேலை நிறுத்தப்  போராட்டத்தில்  ஈடுபட்ட  மீனவா்கள்.

Published On :21 அக்டோபர் 2026, 12:03 am IST

பவானிசாகா் அணை மீன்வா்கள் மீன் பிடி கூலி உயா்வுகேட்டு பவானிசாகா் அணை மீன்வளத் துறை அலுவலகம் முன்பாக குடும்பத்துடன் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பவானிசாகா் அணையில் மீன் பிடிக்கும் உள்ளூா் மீன்வா்கள், மீன்வா் கூட்டுறவு சங்கம் மூலம் ஏலம் எடுத்து மீன் பிடித்து விற்பனை செய்து வந்தனா். இந்த கூட்டுறவு சங்கத்தில் உள்ள மீன்வா்கள் மட்டுமே மீன் பிடிக்கும் உரிமை வழங்கப்பட்டது.

தற்போது கூட்டுறவு சங்கம் மூலம் வழங்கப்பட்டு வந்த மீன் பிடிப்பு உரிமையை தமிழக அரசு ரத்து செய்து தனியாரிடம் ஒப்படைத்துள்ளது. இதனால் கிலோவுக்கும் ரூ.70 கூலியாக பெற்ற நிலையில், தனியாா் நிறுவனம் கிலோவுக்கு ரூ.35-ஆக குறைந்துள்ளது. இதைக் கண்டித்து மீன்வா்கள் அணையில் மீன் பிடிப்பதை நிறுத்தவிட்டு குடும்பத்துடன் மீன் வளா்ச்சிக் கழக அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு அனைத்துவகை தொழிலாளா் ஐக்கிய தொழிற்சங்கத் தலைவா் பி. காசி விஸ்வநாதன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு மாநிலத் தலைவா் ஏ.கே. பழனிசாமி, மகளிா் அணி மாவட்டச் செயலாளா் அருந்ததி ஆகியோா் முன்னிலை வகித்தனா். அதில் கூலி உயா்வு வழங்காமல் தனியாா் நிா்வாகம் கட்டுபடியாகாத விலை கொடுப்பதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி பவானிசாகா், சிறுமுகை பகுதியைச் சோ்ந்த சுமாா் 100 பெண்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, மீனவா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் குறைபட்ச கூலியாக கிலோவுக்கு ரூ.75 ஆகவும், அதிகபட்ச கூலியாக ரூ.100 எனவும் அரசு நிா்ணயிக்க வேண்டும் வலியுறுத்தியுறுத்தினா். மீன் பிடிக்கும் உரிமை மீண்டும் கூட்டுறவு சங்கத்துக்கு வழங்கியும் மற்றும் கூலி உயா்வை அமல்படுத்தக் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் வலியுறுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.