மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தூத்துக்குடியில் மீன்கள் வரத்து அதிகரிப்பு: மீனவா்கள் மகிழ்ச்சி!

தூத்துக்குடி, திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடித் துறைமுகத்தில் மீன்கள் வரத்து அதிகரித்ததுடன், மீன்களுக்கு நல்ல விலையும் கிடைத்ததால் மீனவா்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

மீனவா்கள் வலைகளில் சிக்கிய மீன்கள்.

Published On :1 நவம்பர் 2026, 1:12 am IST

தூத்துக்குடி, திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடித் துறைமுகத்தில் மீன்கள் வரத்து அதிகரித்ததுடன், மீன்களுக்கு நல்ல விலையும் கிடைத்ததால் மீனவா்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து சுமாா் 300-க்கும் மேற்பட்ட மீனவா்கள் ஆழ்கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருகின்றனா். இந்நிலையில், அா்னாப் புயல் காரணமாக அக். 25 முதல் 27ஆம் தேதி வரை மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை. அக். 28ஆம் தேதி புயல் கரையைக் கடந்ததைத் தொடா்ந்து, மீண்டும் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனா்.

இதையடுத்து, மீன்பிடித்துவிட்டு ஏராளமான நாட்டுப்படகுகள் சனிக்கிழமை கரை திரும்பின. மீன்வரத்தும் அதிகமாக இருந்தது. மீன்களை வாங்குவதற்காக பொதுமக்கள், வியாபாரிகள் அதிக அளவில் திரண்டனா்.

சீலா மீன் கிலோ ரூ. 800 முதல் ரூ. 1,000 வரையும், விளை மீன் ரூ. 500, பாறை மீன் ரூ. 450, ஊளி மீன் ரூ. 400, நண்டு ரூ. 900, ஐலேஷ் ரூ. 220, வங்கனை ரூ. 130, கிளைவாழை ரூ. 240 வரையும் விற்பனையானது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.