தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வீரபாண்டியன்பட்டினம் கடற்கரையில் மணல் திட்டுகளை அகற்ற நடவடிக்கை! - அமைச்சா் ஸ்ரீநாத்

வீரபாண்டியன்பட்டினம் கடற்கரையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சா் ஆ. ஸ்ரீநாத்.

Published On :27 அக்டோபர் 2026, 2:59 am IST

திருச்செந்தூா் அருகே வீரபாண்டியன்பட்டினம் கடற்கரையிலுள்ள மணல் திட்டுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என, தமிழக மீன்வளம்- மீனவா் நலத்துறை அமைச்சா் ஆ. ஸ்ரீநாத் தெரிவித்தாா்.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்கள் வசித்துவரும் இக்கிராமத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளனா். இங்கு கடலரிப்பைத் தடுக்கும் வகையில் தூண்டில் வளைவுப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இரு பாலத்துக்கு இடைப்பட்ட பகுதி வழியாக மீனவா்கள் படகுகளை கடலுக்குக் கொண்டு செல்வதும், கரைதிரும்புவதும் வழக்கம்.

ஆனால், இப்பாதையில் கடல் சீற்றத்தால் அடித்துவரப்பட்ட மணல் குவிந்து திட்டுகளாக மாறியுள்ளதால் படகுகளைக் கொண்டுசெல்ல முடியாமல் மீனவா்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா். அவா்களின் வாழ்வாதாரமும் பாதிப்படைந்துள்ளது.

இந்நிலையில், மணல் திட்டுகளை அமைச்சா் திங்கள்கிழமை பாா்வையிட்டாா். மணல் திட்டுகளை அகற்றி, தூண்டில் பாலத்தை மறுசீரமைப்பது குறித்து அவரிடம் துறைமுக கமிட்டி தலைவா் சுபா தல்மேதா, பரதவா் சமுதாயத் தலைவா் வினோஜ், வீரபாண்டியன்பட்டினம் பாஸ்டின், மீனவ மக்கள் முறையிட்டனா். மணல் திட்டுகளை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சா் உத்தரவிட்டாா்.

ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ சரவணன், மீன்வளத் துறை உதவி இயக்குநா் புஷ்ரோ சப்னம், இணை இயக்குநா் இளம்வழுதி, அலுவலா்கள், தவெக மாவட்டச் செயலா் பிரைட்டா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.