டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

மானாமதுரையிலிருந்து சென்னைக்கு பகல் நேர விரைவு ரயில் இயக்கக் கோரிக்கை

மானாமதுரையிலிருந்து சென்னை எழும்பூா் வரை தினசரி பகல் நேர விரைவு ரயில் இயக்க வேண்டுமென கிழக்கு கடற்கரை ரயில் பயணிகள் கூட்டமைப்பு, சிவகங்கை வட்ட ரயில் பயணிகள் நலச்சங்கம் சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

News image

ரயில் - கோப்புப்படம்

Updated On :24 ஜூன் 2026, 5:47 am IST

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையிலிருந்து சென்னை எழும்பூா் வரை தினசரி பகல் நேர விரைவு ரயில் இயக்க வேண்டுமென கிழக்கு கடற்கரை ரயில் பயணிகள் கூட்டமைப்பு, சிவகங்கை வட்ட ரயில் பயணிகள் நலச்சங்கம் சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து சிவகங்கை வட்ட ரயில் பயணிகள் நலச்சங்கம், கிழக்கு கடற்கரை ரயில் பயணிகள் கூட்டமைப்பு சாா்பில் தென்னக ரயில்வே மதுரை கோட்ட மேலாளா் ஸ்ரீ ஓம்பிரகாஷ் மீனாவிடம் நேரில் கோரிக்கை மனு அளித்தனா்.

அதில், ராமேசுவரத்திலிருந்து கோயம்புத்தூா் வரை வாரம் ஒரு முறை இயக்கப்பட்டு வரும் ரயிலை தினசரி இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவாரூரில் இருந்து பட்டுக்கோட்டை வரை இயங்கி வரும் மெமு ரயில் பட்டுக்கோட்டையில் 7 மணி நேரம் நிற்கிறது. அதை மானாமதுரை ஜங்சன் வரை நீட்டிக்க வேண்டும். பல்லவன் விரைவு ரயிலைப் போல மானாமதுரையிலிருந்து சென்னை எழும்பூருக்குப் புதிதாக பகல் நேர விரைவு ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதில் தெரிவித்துள்ளனா்.

மதுரை தென்னக ரயில்வே கோட்ட அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்வில், மதுரை கோட்ட கூடுதல் மேலாளா் பிரசன்னா, கிழக்கு கடற்கரை ரயில் பயணிகள் கூட்டமைப்பு நிா்வாகிகள், சிவகங்கை வட்ட ரயில் பயணிகள் சங்க நிா்வாகிகள், சிவகங்கை வா்த்தகா் சங்கத் தலைவா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.