தமிழ்நாடு மின் துறைக்கு ஒட்டுமொத்தமாக ரூ.2.47 லட்சம் கோடி கடன் இருப்பதாக, மின் வாரியத் துறையின் நிதிநிலை குறித்து வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2001ஆம் ஆண்டு முதலான நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை தமிழ்நாடு மின் துறை அமைச்சர் நிர்மல் குமார் வெளியிட்டு அது தொடர்பான விவரங்களை வெளியிட்டு வருகிறார்.
தமிழ்நாடு மின் வாரியத் தலைமை அலுவலகத்தில் தமிழக மின் துறை அமைச்சர், வெள்ளை அறிக்கை வெளியிட்டார். இந்த அறிக்கையில் தமிழக மின்துறையின் நிதி நிலைமை எப்படி உள்ளது, மின்சார வாரியத்தின் நிதி, செலவினங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் வாரித்தின் உள்கட்டமைப்பு, மனிதவளம், தளவாடப் பொருள்கள், வருவாய், செலவினம் உள்ளிட்ட விவரங்களும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. தற்போது மின் துறைக்கு ரூ.34,447 கோடி பற்றாக்குறை இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
அமைச்சர் நிர்மல் குமார் கூறியிருக்கும் முக்கிய விவரங்களில்..
மின் துறையில் 65,921 காலிப் பணியிங்கள் உள்ளன.
திமுக ஆட்சியில் சரியாக 9,136 பேர் ஓய்வு பெற்றிருக்கும் நிலையில், வெறும் 343 பேர் மட்டுமே பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
2006ஆம் ஆண்டு மின் துறையின் பற்றாக்குறை 8,335 கோடியாக இருந்த நிலையில், 2026ஆம் ஆண்டு ரூ.34,447 கோடி பற்றாக்குறையாக உள்ளது.
பிற மாநிலங்களுக்கு இடையே பகிர்வு 4,248 மெகா வாட்
2021 - 26 வரை மின் துறைக்கு ரூ.87,399 கோடி கடன் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
தமிழக மின்துறையில் காலியாக உள்ள 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்.
கடும் பணியாளர் பற்றாக்குறை உள்ளது. இதனால் ஒரு நபர் 10 பேரின் வேலைகளை செய்ய வேண்டி உள்ளது.
தமிழக மின் துறையில் தற்போது ஊழியர்களின் எண்ணிக்கை 2 மடங்கு உயர்ந்திருக்க வேண்டும்.
தேவை அதிகரித்தும் மின் உற்பத்தி கட்டமைப்பு அதிகரிக்கப்படவில்லை.
1910 துணை மின் நிலையங்கள் உள்ளன.
கடந்த ஐந்து ஆண்டுகளில் வெறும் 122 மட்டுமே புதிதாக நிறுவப்பட்டுள்ளன.
ரூ.9 ஆயிரம் கோடியில் 238 துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும்.
2000-ஆம் ஆண்டு மின் வாரிய ஊழியர்கள் எண்ணிக்கை 99,481. இப்போது 76,174.
பாதியில் உள்ள திட்டங்களை முடிகக் ரு.8 ஆயிரம் கோடி தேவை.
உப்பூர் மின் நிலையம் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை.
வரவு - செலவு நிலவரம்
2001 - 06ஆம் ஆண்டு வரை
வருவாய் 59,084 கோடி - செலவு ரூ.67,439 கோடி - பற்றாக்குறை ரூ.8,335 கோடி
2006 - 2011 ம் ஆண்டு நிலவரப்படி
வருவாய் ரூ.92,737 கோடி - செலவு - ரூ.1,28,200 கோடி - பற்றாக்குறை ரூ.35,463 கோடி
2011 - 2016ஆம் ஆண்டு நிலவரப்படி
வருவாய் 1,92,972 கோடி - செலவு 2,49,332 கோடி - பற்றாக்குறை ரூ.56,361 கோடி
2021 - 2026ஆம் ஆண்டில் ரூ.4,07,000 கோடி வருவாய், ரூ.5,02,443 கோடி செலவு, ரூ.34,447 கோடி பற்றாக்குறை இருந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மின்துறை வெள்ளை அறிக்கை இன்று வெளியீடு
இன்றைய செய்திகள் ஜூன் 16 - நேரலை
தமிழ்நாட்டின் நிதி நிலைமை: வெள்ளை அறிக்கை வெளியிட்டார் அமைச்சர்!

தமிழ்நாட்டின் நிதி நிலை என்ன? வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

