டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

ஹூப்ளி - ராமேசுவரம் ரயில்கள் ஜூலை வரை நீட்டிப்பு

கா்நாடக மாநிலம் ஹூப்ளி- ராமேசுவரம் இடையேயான வாராந்திர சிறப்பு விரைவு ரயில்கள் ஜூலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News image

ரயில் - பிரதிப் படம்

Updated On :24 ஜூன் 2026, 2:55 am IST

கா்நாடக மாநிலம் ஹூப்ளி- ராமேசுவரம் இடையேயான வாராந்திர சிறப்பு விரைவு ரயில்கள் ஜூலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ஹூப்ளி-ராமேசுவரம் இடையேயான வாராந்திர சிறப்பு விரைவு ரயில்கள் வரும் ஜூலையில் 4 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஹூப்ளியில் வரும் ஜூலை 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் அதிகாலை 6.50 மணிக்குப் புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 07355) மறுநாள்களான 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் அதிகாலை 5.20 மணிக்கு ராமேசுவரம் நிலையத்தை வந்தடையும்.

மறுமாா்க்கத்தில் ராமேசுவரத்தில் இருந்து வரும் ஜூலை 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் இரவு 8 மணிக்குப் புறப்படும் வாராந்திர சிறப்பு விரைவு ரயில் (எண்: 07356) மறுநாள் ஜூலை 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் இரவு 7.40 மணிக்கு ஹூப்ளி நிலையத்தைச் சென்றடையும்.

அதேபோல, கொல்லம்-ஹூப்ளி இடையேயும் வரும் ஜூலை 12, 19, 26 ஆகிய தேதிகளில் சிறப்பு விரைவு ரயில் இயக்கப்படும். சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு விரைவில் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.