டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!

தலைமைச் செயலகத்தில் இருந்து பெரம்பூருக்குச் செல்லும் பேருந்தில் முதல்வர் விஜய் பயணம்....

News image

பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய் - DIPR

Updated On :1 மணி நேரம் முன்பு

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து பெரம்பூருக்குச் செல்லும் பேருந்தில் முதல்வர் விஜய் பயணம் மேற்கொண்டார்.

தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னை, கோவை உள்பட 6 கோட்டங்களுக்காக 300 புதிய அரசுப் பேருந்துகளின் சேவைகளை முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று(வியாழக்கிழமை) தொடக்கிவைத்தார்.

இதன்பின்னர் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து பெரம்பூர் செல்லும் 29ஏ பேருந்தில் ஏறி ஓட்டுநர், நடத்துனருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.

Story image

பின்னர் அந்த பேருந்தில் முன் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்தார். நடத்துனரிடம் பணம் கொடுத்து டிக்கெட் எடுத்துக் கொண்டார். மேலும் நடத்துனரை தனது இருக்கைக்கு அருகே அமர்த்தி அவருடன் பேசிக்கொண்டே பயணித்தார்.

அதுமட்டுமன்றி பேருந்தில் பயணித்தபோது தனது போனில் விடியோ எடுத்துக்கொண்டார். பேருந்தை ஓட்டிய ஓட்டுநர் மற்றும் வழியில் நின்றவர்களை முதல்வர் தனது போனில், விடியோ எடுத்தார்.

Story image

தலைமைச் செயலகத்தில் இருந்து கலங்கரை விளக்கம் வரை சென்ற முதல்வர், அதே பேருந்தில் மீண்டும் தலைமைச் செயலகம் திரும்பினார்.

Chief Minister Vijay traveled on a government bus bound for Perambur

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.