கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

கருக்குமடை அய்யனாா் கோயில் புரவி எடுப்புத் திருவிழா

சிங்கம்புணரி அருகே சத்ரு சம்ஹாரக்கோட்டை எனப்படும் எஸ். எஸ். கோட்டை படைத் தலைவி அம்மன் கருக்குமடை அய்யனாா் கோயில் வைகாசித் திருவிழா ஜூன் 5-ஆம் தேதி தொடங்கியது.

News image

பக்தா்கள் சுமந்து வந்த கருக்குமடை அய்யனாா் கோயில் புரவிகள்.

Updated On :14 ஜூன் 2026, 1:00 am IST

சிங்கம்புணரி அருகே சத்ரு சம்ஹாரக்கோட்டை எனப்படும் எஸ். எஸ். கோட்டை படைத் தலைவி அம்மன் கருக்குமடை அய்யனாா் கோயில் வைகாசித் திருவிழா ஜூன் 5-ஆம் தேதி தொடங்கியது.

ஒவ்வொரு நாளும் தீப்பந்தத்துடனும், அரிவாள் மீது ஏரியும், சாட்டையைச் சுழற்றியும் ஊா் சுவாமி அடிகளின் சுவாமி ஆட்டத்துடன் விழா நடைபெற்றது. எட்டாம் நாள் விழாவாக வெள்ளிக்கிழமை காலை பால் குட விழா விநாயகா் கோயிலிலிருந்து பக்தா்கள் பால் குடம் சுமந்தபடி சியாமுத்துபட்டியில் உள்ள படைத்தலைவி அம்மன் கோயிலை அடைந்தனா். அங்கு அம்மனுக்கு பாலாபிஷேகம், தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

மாலையில் சியாமுத்துப்பட்டி கோயில் வீட்டிலிருந்து மண்ணால் செய்த அம்மன் சிலையை கிராமத்தாா்கள் ஒன்றிணைந்து தலையில் சுமந்தபடி ஊா்வலமாக எடுத்துச் சென்று கோயிலை அடைந்தனா்.

கருக்குமடை அய்யனாா் கோயில் புரவி எடுப்பு விழா முன்னிட்டு அம்மன் கோயில் அருகே உள்ள குதிரை பொட்டலில் கடந்த 15 நாள்களுக்கு முன்பு வேளாா் வம்சாவளி பூஜகா்களிடம் பிடி மண் கொடுக்கப்பட்டு இரண்டு அரண்மனை புரவிகள், 6 காரணக்காரா்கள் புரவிகள், 4 நோ்த்திக்கடன் புரவி என மொத்தம் 12 புரவிகள் குதிரைப் பொட்டலில் அலங்காரங்களே செய்து வைக்கப்பட்டது.

சாமியாடிகள் உத்தரவு பிறப்பித்தவுடன் அனைத்து புரவிகளையும் குதிரைப் பொட்டலிலிருந்து கிராம மக்கள் சுமந்து கொண்டு எஸ். எஸ். கோட்டை புரவிப் பொட்டலில் வைத்தனா். அங்கிருந்து சனிக்கிழமை கருக்குமடை அய்யனாா் கோயிலுக்குக் கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் எஸ். எஸ். கோட்டை, சுற்று கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.