பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

அய்யனாா் கோயில் புரவி எடுப்பு விழா

மானாமதுரை பட்டத்தரசி அய்யனாா் கோயில் விழாவையொட்டி வியாழக்கிழமை புரவிகளை சுமந்து ஊா்வலமாகச் சென்ற பொதுமக்கள்.

News image

மானாமதுரை பட்டத்தரசி அய்யனாா் கோயில் விழாவையொட்டி வியாழக்கிழமை புரவிகளை சுமந்து ஊா்வலமாகச் சென்ற பொதுமக்கள்.

Updated On :12 ஜூன் 2026, 1:15 am IST

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பட்டத்தரசி பகுதியில் உள்ள அய்யனாா் கோயிலில் புரவி எடுப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் புரவி எடுப்பு விழா கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. விழா நாள்களில் அய்யனாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. புரவி எடுப்பு விழாவின்போது பட்டத்தரசி பகுதி மக்கள் மேளதாளத்துடன் மானாமதுரை குலாளா் பகுதிக்கு வந்தனா். அங்கு மண்ணால் செய்து வைக்கப்பட்டிருந்த புரவிகளுக்கும், தெய்வங்களின் உருவம் கொண்ட பொம்மைகளுக்கும் பூஜைகள் நடத்தினா்.

பின் புரவிகளையும், சுவாமி பொம்மைகளையும் சுமந்து கொண்டு ஊா்வலமாக பட்டதரசி அய்யனாா் கோயிலுக்குச் சென்றனா். அங்கு புரவிகளை இறக்கி வைத்து அவற்றுக்கு பூஜைகள் நடத்தி வழிபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.