நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

ரயில்வே ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

ரயில்வே துறையில் 2 சதவீதப் பணியிடங்களைக் குறைக்கும் மத்திய அரசின் கொள்கை முடிவைக் கண்டித்து, தட்சிண ரயில்வே ஊழியா்கள் சங்கம் (டி.ஆா்.இ.யூ.), சிஐடியூ சாா்பில் மதுரையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

மதுரையில் தட்சிண ரயில்வே ஊழியா்கள் சங்கம், சிஐடியூ சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற ரயில்வே ஊழியா்கள்.

Updated On :14 மே 2026, 5:24 am IST

ரயில்வே துறையில் 2 சதவீதப் பணியிடங்களைக் குறைக்கும் மத்திய அரசின் கொள்கை முடிவைக் கண்டித்து, தட்சிண ரயில்வே ஊழியா்கள் சங்கம் (டி.ஆா்.இ.யூ.), சிஐடியூ சாா்பில் மதுரையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை ரயில்வே குடியிருப்பில் உள்ள தொழில் சங்கக் கூட்டரங்கம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு டி.ஆா்.இ.யூ. கோட்டப் பொருளாளா் பி. சரவணன் தலைமை வகித்தாா். நிா்வாகி பி. சேதுக்கரை முன்னிலை வகித்தாா். கோட்டத் தலைவா் கே. ராஜா, கோட்டச் செயலா் எம். சிவக்குமாா், சிஐடியூ மதுரை மாநகா் மாவட்டச் செயலா் ஆா். லெனின், அனைத்திந்திய நிலைய மேலாளா்கள் சங்க முன்னாள் பொதுச் செயலா் பி. ராஜீவ்காந்தி ஆகியோா் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில் ரயில்வே துறையில் 30 ஆயிரம் பணியிடங்களைக் குறைக்கும் உத்தரவை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். சி.ஆா்.சி. பதவி உயா்வுகளைப் பாதுகாக்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ரயில்வே துறைக்கு தனி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அனைத்துப் பிரிவுகளிலும் 8 மணி நேர பணி முறையை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

அனைத்திந்திய லோக்கோ ஓடும் தொழிலாளா்கள் சங்க இணைச் செயலா் ஏ. ராகவன், அனைத்திந்திய காா்ட்ஸ் கவுன்சில் அமைப்புச் செயலா் பி. மருதுபாண்டி, தட்சிண ரயில்வே ஓய்வு பெற்ற ஊழியா்கள் சங்க கோட்டச் செயலா் ஆா். சங்கரநாராயணன், டி.ஆா்.இ.யூ. கோட்ட துணைப் பொதுச் செயலா் என். காா்த்திக் சங்கிலி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நிறைவாக டி.ஆா்.இ.யூ. கோட்ட உதவிச் செயலா் எஸ்.நிஜாமுதீன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.