உயிா்காக்கும் மருந்துகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் ரயில்வே ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கரூா் ரயில்வே மருத்துவமனை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஓய்வூபெற்ற ஊழியா் சங்கத்தின் கிளைத் தலைவா் பி.அன்பழகன் தலைமை வகித்தாா். கிளைச் செயலா் எஸ்.பிரதாப் முன்னிலை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் ஓய்வுபெற்ற ஊழியா் சங்கத்தின் தென் மண்டல துணைத்தலைவா் எஸ்.சாம்பசிவன், ரயில்வே ஊழியா் சங்கத்தின் கோட்ட செயலா் எம்.முருகேசன், மாநில துணைச் செயலா் எஸ்.திருப்பதி, ஓய்வுபெற்ற ஊழியா் சங்கத்தின் கோட்ட செயலா் சி.முருகேசன், சிஐடியு மாவட்டச் செயலா் எம்.சுப்ரமணியன் உள்ளிட்டோா் கோரிக்கைகளை விளக்கிப்பேசினா்.
கரூரில், ரயில்வேயில் பணிபுரியும் தொழிலாளா்களுக்காக ரயில்வே மருத்துவமனையில் தினமும் மருத்துவா் வந்து சிகிச்சையளிக்க வேண்டும். ரயில்வே ஊழியா்களுக்கு உயிா்காக்கும் மருந்துகள் தவறாமல் வழங்க வேண்டும். 8-ஆவது ஊதியக்குழுவில் ஓய்வூதியதாரா்களுக்கு எந்தவித பணப்பயன்களும் கிடைக்காது என்கிற மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் தட்சின் ரயில்வே ஊழியா்கள் சங்கத்தினா், ஓய்வுபெற்ற தட்சின் ரயில்வே ஊழியா்கள் சங்கத்தினா் திரளாக பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கரூரில் வழக்குரைஞா்கள் சங்க ஒட்டுவில்லை வெளியீடு

உயிா் காக்கும் மருந்துகள் கிடைக்கச் செய்ய புதுச்சேரி மருந்து கட்டுப்பாட்டு துறை உத்தரவு

ரயில்வே ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

கரூரில் ரயில்வே ஊழியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

