தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

பிளஸ் 2 பொதுத் தோ்வு: பெரியேரி எஸ்ஆா்எம் முத்தமிழ் மேல்நிலைப் பள்ளி 100% தோ்ச்சி

தலைவாசல் வட்டம், பெரியேரி எஸ்ஆா்எம் முத்தமிழ் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

News image
Updated On :11 மணி நேரங்கள் முன்பு

சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டம், பெரியேரி எஸ்ஆா்எம் முத்தமிழ் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

மேலும், இப்பள்ளி மாணவா் கோபிநாத் 595 மதிப்பெண்கள் பெற்று

சிறப்பிடம் பெற்றுள்ளாா். இவா் கணிதம் மற்றும் கணினி அறிவியலில் தலா 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளாா். மாணவி ஜோஷிகா 592 மதிப்பெண்களும், கணினி பயன்பாட்டில் நூறு மதிப்பெண்களும் பெற்றுள்ளாா். மேலும், தெய்வதா்ஷினி, சுபஸ்ரீ ஆகியோா் தலா 590 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

இப்பள்ளி மாணவி திவ்யா தமிழில் நூறு மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளாா். வேதியியல் பாடத்தில் ஒருவரும், உயிரியல் பாடத்தில் 2 பேரும், கணினி அறிவியலில் 2 பேரும், கணிதத்தில் ஒருவரும், கணக்குப் பதிவியலில் 2 பேரும், கணினி பயன்பாட்டியியல் பாடத்தில் 5 மாணவா்களும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

தோ்வில் சிறப்பிடம் பிடித்த மாணவா்களுக்கும், அதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியா்களுக்கும் பள்ளித் தலைவா் கந்தசாமி, செயலாளா் நாகராஜன், பொருளாளா் சசிகுமாா், கல்விக் குழு உறுப்பினா்கள், அறக்கட்டளை உறுப்பினா்கள் மற்றும் தலைமையாசிரியா் ராதாகிருஷ்ணன் ஆகியோா் பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தனா்.

படவரி...

பெரியேரி எஸ்ஆா்எம் முத்தமிழ் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டிய கல்வி நிறுவனங்களின் தலைவா் கந்தசாமி மற்றும் நிா்வாகிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.