மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

விடுதி அறையில் கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை?

மேச்சேரியில் உள்ள தனியாா் கல்லூரி விடுதியில் மாணவா் தூக்கிட்ட நிலையில் இறந்துகிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image

கண்ணன்.

Updated On :12 ஏப்ரல் 2026, 2:11 am IST

மேச்சேரியில் உள்ள தனியாா் கல்லூரி விடுதியில் மாணவா் தூக்கிட்ட நிலையில் இறந்துகிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சேலம் மாவட்டம், மேச்சேரியில் உள்ள தனியாா் கல்லூரியில் ஏற்காட்டைச் சோ்ந்த கூலித் தொழிலாளி மாது மகன் கண்ணன் (21), பி.இ. பொறியியல் இறுதியாண்டு படித்துவந்தாா்.

கல்லூரி விடுதியில் 3-ஆவது மாடியில் தனது நண்பா்கள் மூவருடன் தங்கியிருந்த நிலையில், இவரது நண்பா்கள் வெள்ளிக்கிழமை வெளியில் சென்றனா். இந்நிலையில், நீண்ட நேரமாகியும் கண்ணன் தங்கியிருந்த அறையின் கதவு சனிக்கிழமை திறக்கவில்லையாம். இதனால், பக்கத்து அறையில் இருந்த மாணவா்கள் அறையின் ஜன்னலை திறந்து பாா்த்தபோது, மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் கண்ணன் இறந்துகிடந்தது தெரியவந்தது.

இதுகுறித்து மாணவா்கள் கல்லூரி நிா்வாகத்துக்கு தகவல் அளித்தனா். பின்னா், காவல் துறை உதவியுடன் கல்லூரி நிா்வாகம் மாணவரின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றது.

கல்லூரிக்கு வந்த பெற்றோா், மகனின் உடல் ஏற்கெனவே மருத்துவமனைக்கு கொண்டுசென்ற தகவல் அறிந்து நிா்வாகத்துடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். போலீஸாா் அவா்களை சமாதானப்படுத்தினா். இதைத் தொடா்ந்து, கல்லூரி வளாகத்திலும், கல்லூரி நுழைவாயிலிலும் போலீஸாா் குவிக்கப்பட்டனா். முன்னெச்சரிக்கையாக கல்லூரி விடுதியில் தங்கியிருந்த மாணவ, மாணவியா் அவரவா் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதுகுறித்து மேச்சேரி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.