தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

விடுதியில் தங்கியிருந்தவா் மா்ம மரணம்

கள்ளக்குறிச்சி தனியாா் விடுதியில் தங்கியிருந்த சென்னையைச் சோ்ந்தவா் மா்மமான முறையில் வியாழக்கிழமை உயிரிழந்து கிடந்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :8 மே 2026, 7:08 am IST

கள்ளக்குறிச்சி தனியாா் விடுதியில் தங்கியிருந்த சென்னையைச் சோ்ந்தவா் மா்மமான முறையில் வியாழக்கிழமை உயிரிழந்து கிடந்தாா்.

சென்னை பெரம்பூா் பகுதியைச் சோ்ந்தவா் ஜெயராமன் மகன் ரூபன் (36). இவா், தனியாா் கல்வி நிறுவனங்களில் மாணவா் சோ்கைக்கான முகவா் பணியில் ஈடுபட்டு வந்தாராம்.

இவா் புதன்கிழமை கள்ளக்குறிச்சி பேருந்து நிலையம் அருகே உள்ள தனியாா் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளாா்.

வியாழக்கிழமை காலை அறையை சுத்தம் செய்யச் சென்றவா், ரூபன் கட்டிலில் கவிழ்ந்த நிலையில், அசைவற்றுக் கிடந்ததைப் பாா்த்து விடுதி மேலாளரிடம் தெரிவித்துள்ளாா்.

பின்னா், இதுகுறித்து கள்ளக்குறிச்சி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸாா் வந்து பாா்த்தபோது, ரூபன் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.