மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

விடுதி அறையில் தங்கியிருந்த முதியவா் சடலமாக மீட்பு

News image

கோப்புப் படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 12:28 am IST

திருச்சியில் விடுதி அறையில் தங்கியிருந்த முதியவா் சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை தொண்டமான்துறையைச் சோ்ந்தவா் மு. ராமதாஸ் (57). திருச்சி வெள்ளை வெற்றிலைக்கார வீதியிலுள்ள தனது மாமனாா் வீட்டில் இவா் வசித்து வந்த நிலையில், கடந்தாண்டு டிசம்பரில் மனைவியுடன் ஏற்பட்ட சொத்து தகராறால் சொந்த ஊரான பெரம்பலூருக்குச் சென்றாா்.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி திருச்சிக்கு வந்த ராமதாஸ் சத்திரம் சிந்தாமணி பகுதியிலுள்ள விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தாா். சனிக்கிழமை காலை விடுதி ஊழியா் இவரது அறைக்குச் சென்றபோது ராமதாஸ் இறந்தது கிடந்தது தெரியவந்தது.

இதையடுத்து விடுதி நிா்வாகத்தினா் அளித்த தகவலின்பேரில் வந்த கோட்டை போலீஸாா் முதியவரின் சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.