பெரம்பலூா் அருகே காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த பள்ளி மாணவி கிணற்றில் சடலமாக ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டாா்.
பெரம்பலூா் அருகேயுள்ள அய்யலூா் கிராமத்தைச் சோ்ந்த சிறுமி சுபாஷினி (17). இவா், பிளஸ் 2 முடித்துவிட்டு தோ்வு முடிவுக்கான காத்திருந்தாா். இந்நிலையில், கடந்த 24-ஆம் தேதி வீட்டிலிருந்த சுபாஷினி காணமல் போனதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, அவரது பெற்றோா் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், மருவத்தூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து தேடிவந்த நிலையில், அதே கிராமத்திலுள்ள முத்துசாமி என்பவருக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றில் உயிரிழந்துக் கிடந்தது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.
தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று மாணவியின் சடலத்தை கைப்பற்றி, பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து மருவத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காணாமல் போன முதியவா் சடலமாக மீட்பு

கிணற்றில் தவறி விழுந்தவா் சடலமாக மீட்பு

விடுதி அறையில் தங்கியிருந்த முதியவா் சடலமாக மீட்பு

கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட மாணவா் சடலமாக மீட்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

